tamilnadu

img

நீட் தேர்வை ரத்து செய்திடுக வாலிபர், மாணவர் சங்கத்தினர் ஆவேசம்

சேலம், செப்.13- நீட் தேர்வை ரத்து செய்ய வலி யுறுத்தி வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காலத் தில் மாணவர்களை பாதிக்கும் நீட்  தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்வு பயத்தால் ஏற்பட்ட மாணவ,  மாணவிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப் பேற்க வேண்டும். நீட் தேர்வி னால் தற்போது வரை உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலையும், குடும்பத் திற்கு ரூ.50 லட்சம் நிதி உதவியும்  வழங்க வேண்டும் என வலியு றுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் ஜங்சன் தலைமை தபால் நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் மாநில தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், கிழக்கு மாநகர செயலாளர் பெரியசாமி, வடக்கு  மாநகர செயலாளர் பிரசன்னா உள்ளிட்ட சேலம் கிழக்கு, மேற்கு,  வடக்கு கமிட்டி நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.  நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் பாலச்சந்திர போஸ், மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்டச் செய லாளர் கண்ணன், மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன், மாவட்டச் செய லாளர் சரவணன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டு மத்திய, மாநில அரசிற்கு எதிராக ஆவேச முழக்கங் களை எழுப்பினர்.

;