சேலம், ஜூன் 3- சேலம் மாவட்டத்தில் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலி அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது என மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தகவல் தெரிவித் துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சி்யர் சி.அ.ராமன், தெரி வித்ததாவது, தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத வண்ணமும், விளை பொருட்களின் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக் கிடும் நோக்கத்துடனும் சூரிய சக்தியால் சூரிய சக்தி யால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலியினை ரூ.3 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என வேளாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சூரிய ஒளி மின்வேலி அமைப்பானது சூரிய ஒளி மின் தகடுகள் மூலம் கிடைக் கும் மின்சாரத்தினால் இயங்கக்கூடியது. இதனால், விலங்கு கள், வேட்டைக்காரர்கள் மற்றும் அந்நியர்களுக்கு மின் வேலியில் செலுத்தப்படும் உயர்மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்துவிசை மின்அதிர்ச்சியினால் அசௌகரியம் ஏற்பட்டு விளைபொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படா மலும், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பில்லாம லும், விவசாயிகளுக்கு கிடைத்திட வகை செய்யும் விவசா யிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலியின் அமைப் பினை தெரிவு செய்து கொள்ளலாம். எனவே, தமிழக அரசு அனைத்து மாவட்ட விவசாயிக ளின் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்வதால், இத்திட்டத்தில் பயன்பெற விருப்ப முள்ள அனைத்து வட்டார விவசாயிகளும் பயனடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.