tamilnadu

img

சேலம்: சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து

சேலம் அருகே சென்ற கொண்டிருந்த காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது. 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர். ஆனால் அந்த கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.


;