tamilnadu

img

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி 62ஆவது ஆண்டு விழா

சேலம், மார்ச் 1-  சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி யின் 62ஆவது ஆண்டு விழா  சனியன்று நடைபெற்றது.  கல்லூரியின் முதல்வர் வீ.கார்த்திகேயன் 2019-20 ஆம் ஆண்டின் ஆண்ட றிக்கையைச் சமர்ப்பித் தார். கல்லூரியின் துணைத் தலைவர்கள் சொக்கோ வள்ளியப்பா மற்றும் தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்என்எஎம் நிறுவனங்களின் இயக்குனர் டி.முரளிதர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசு களை வழங்கி சிறப்புரையாற்றினார். தியாக ராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர்  சி.வள்ளியப்பா தலைமையுரையாற்றினார்.  இவ்விழாவில் தொழில் துறைகளில் சிறந்து விளங்குகின்ற பல்வேறு துறை களை சார்ந்த இப்பயிலகத்தின் முன்னாள்  மாணவர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். சீதா வள்ளியப்பா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி  சிறப்பித்தார்கள். இவ்விழாவில் கல்லூரி யைச் சார்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரி யர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.