tamilnadu

img

3-ஆம் வகுப்பு மாணவிக்குத் தங்கம்

மேற்கு ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்

மேற்கு ஆசிய செஸ் சாம்பியன் ஷிப் (ஜூனியர்) தில்லியில் நடைபெற்றது. 10 ஆசிய நாடுகள் பங்கேற்ற இந்த தொடரின் மகளிர் 8 வயதிற்கு உட்பட்டப் பிரிவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தாஷ்னா அகர்வால் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.  மேலும் ரேபிட் சுற்றில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி ஒரே நேரத்தில் 2 பதக்கங்களைப் பெற்று நாட்டிற்கு பெருமையைச் சேர்த்துள்ளார்.   நொய்டாவில் உள்ள சிவ் நாடார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு பயின்று வரும் தாஷ்னா அகர்வால் (8 வயது) கடந்த ஜூலை  மாதம் தில்லியில் நடைபெற்ற  காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். தாஷ்னா என்ற தளிரின் வயது மிகக் குறைவாக இருப்பதால் எதிர்காலத்தில் செஸ் துறையின் மிகப்பெரிய வல்லரசாக ஜொலிப்பார் என்பதில் எவ்வித ஐயமு மில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

;