வாலிபர் சங்க மாநில மாநாடு: ரூ. 2 லட்சம் நிதி வழங்கல்
ஓசூர், செப்.29 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18வது மாநில மாநாடு அக்டோபர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் ஓசூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு பணிகளை பார்வையிட வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.ஏ. ரஹீம் ஓசூர் வருகை புரிந்தார். அவரிடம் கிருஷ்ணகிரி மாவட்ட சிபிஎம் மையக் கிளை சார்பில் ரூ.1 லட்சம், தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை சார்பில் ரூ.1 லட்சம் என மொத்தமாக ரூ.2 லட்சத்தை எஸ்.ஆர்.ஜெயராமன், சேது மாதவன், மாநாட்டுப் பொருளாளர் நாகேஷ்பாபு, ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் இளவரசன், தலை வர் நஞ்சாரெட்டி, பொருளாளர் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
                                    