சென்னை,ஏப், 30- கல்லீரல் நோய்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை மற்றும் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி ஆகியவை இணைந்து ஞாயிறன்று (ஏப்.30) விழிப்புணர்வு நடை பயணத்தை நடத்தின. இதை நகைச்சுவை நடிகர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். உலக கல்லீரல் தினத்தையொட்டி நடத்தப்பட்ட இந்த பயணத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லீரல் நோய்க்கான காரணங்கள், அதன் அறிகுறிகள் மற்றும் அந்த நோய் பாதிப்பு இல்லாமல் தடுப்பது பற்றிய பல்வேறு தகவல்கள் அடங்கிய பதாகைகள் இதில் கலந்து கொண்டவர்கள் ஏந்திச் சென்றனர்.