உயரம் வளர்ச்சி தடைபட்டோருக்கான உலக தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் மனிதசங்கிலி செவ்வாயன்று (அக். 22) நடைபெற்றது. இதில் தலைவர் ஜான்சிராணி, செயலாளர் நம்புராஜன், தென் சென்னை மாவட்டத் தலைவர் பாபு, செயலாளர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பொது இடங்களில் தடையற்ற சூழலை உருவாக்க வேண்டும், பேருந்தில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும், சிறப்பு வீடு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.