tamilnadu

img

33 சதவீத பணியாளர்களுடன் கோவில் அலுவலகங்கள் இயங்க அனுமதி

சென்னை, மே 7- கோயில் அலுவல கங்கள் 33 சதவீத பணி யாளர்களுடன் இயங்குவ தற்கு இந்து சமய நிலைத்  துறை அனுமதி அளித்துள் ளது. கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊர டங்கு உத்தரவு அமல்ப டுத்தப்பட்டுள்ளது. அத்தி யாவசிய தேவைகளை தவிர பிற அனைத்து சேவை களும் முடக்கப் பட்டன. அதன்படி நாடு முழுவதிலும் உள்ள கோயில்களும் அதனை சார்ந்த துணை அலுவலகங்களும் மூடப் பட்டன. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில் அலுவலகங்களும் 35 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்று அரசு அறி வித்திருக்கிறது. அலுவல கத்தில் கிருமி நாசினி கண் டிப்பாக இருக்க வேண்டும். சளி, இருமல் உள்ள பணி யாளர்களையும், கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் பணி யாளர்களையும் அனு மதிக்கக் கூடாது. திருக்கோயில் வளா கத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை தவிர மற்ற யாரையும் அனு மதிக்கக் கூடாது” என குறிப்  பிடப்பட்டுள்ளது.

;