tamilnadu

பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னை, ஏப்.20-தமிழகத்தின் சில பகுதிகளில் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடந்த ஒருமாதகாலமாக வெயில் வாட்டி வதைத்தது. கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டால் பெண்கள் காலி குடங்களுடன் போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 2 மணி நேரமாக பலத்த மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்துள்ளது. கோடை வெயிலால் வாழ்க்கை கடுமையாக பாதிக் கப்பட்ட நிலையில் ஈரோடு பகுதியில் பெய்த மிதமான மழை ஆறுதலை தந்துள்ளது.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விடிய விடிய பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டது. மழையின் காரணமாக தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசியதால் வெயிலின் புழுக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டனர்.கரூர் மாவட்டத்தில் மாலை முதல் மேகமூட்டம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவில் பலத்த மழை பெய்தது. வேலாயுதம் பாளையம், புன்னம் சத்திரம் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது திருவாரூர், புலிவலம், கூடூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. தருமபுரி, சேலம், திருப்பூர், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களி லும் பரவலாக மழை பெய்துள்ளது. அடுத்த ஒரு சில நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

;