tamilnadu

img

கவிதை : எங்கெங்கு காணினும் எங்கள் வெண்கொடி

பள்ளி காக்கும் பயணங்கள்
அரசு பள்ளி காக்கும் பயணங்கள்
மழையும் வெயிலும் அவர்க்கில்லை
மாணவர் நலனே முக்கியம்
1500 கிலோ மீட்டர்  ஆவேச பயணம்
ஆண் பெண் பேதமின்றி!

நவீன பார்களுடன் டாஸ்மாக் கடைகள்
முழு மனதுடன் திறக்கும் அரசாங்கம்
கல்வி கண் திறந்த பள்ளிகளை
மூடி மூடி தொலைத்திடுமோ?
அருகமைப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள்
எங்கே எங்கள் பள்ளிகள்
விண்ணதிர வீர முழக்கம்
தலைமுறை காக்க தளரா பயணம்

வெல்லும் வரை சபதமெடுத்து
வீர பயணம் செய்கின்ற எஸ்எப்ஐக்கு
ஆவேச முழக்க வரவேற்பு
ஆர்ப்பரிக்கும் வீர வாழ்த்து
வேதனைகள் தீரும் வரை 
விடியல் ஒளிகாணும் வரை 
சோதனையை சாதனையாக்கிடும்
எழுச்சி பயணம் வெல்கவே!

===திருவை சுஜாமி===

;