tamilnadu

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் மாநில அரசுக்கு வாலிபர் சங்கம் கண்டனம்

சென்னை,ஜூன் 24- தமிழகத்தில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வியியல் கல்லூரி யில் படித்து விட்டு ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக தமிழக அரசு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் போட்டித் தேர்வை கூட போராடித்தான் எழுத  வேண்டும் என்ற சூழலுக்கு தமிழக  அரசு மாணவர்களை தள்ளிவிட்டுள்ளது.  இது மோசமான விளைவுகளை ஏற்ப டுத்தும் என்று இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம் சுட்டிக்காட்டியிருக்கி றது.  இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என். ரெஜிஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ். பாலா ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- 23-06-2019 அன்று தமிழகம் முழு வதும் 119 மையங்களில் முதுகலை கணினி ஆசிரியர் நிலை ஒன்றுக்கு தேர்வு நடைபெற்றுள்ளது. ஒரு முறை யான தயாரிப்பு இல்லாத காரணத்தி னால் மாநிலம் முழுவதும் கணினி ஆசிரி யர்களுக்கான தேர்வு எழுத வந்த அனை வரும் கடுமையான மன உளைச்ச லுக்கு ஆளாக்கப்பட்ட கொடுமை நடந்தேறியுள்ளது. பல இடங்களில்  தேர்வு எழுத வந்த இளைஞர்களுக்கு உரிய இடம் ஒதுக்கப்படாமலும் அதே போன்று கணினியின் சர்வர் பிரச்சனை எனச் சொல்லி பல இடங்களில் குளறு படி நடந்தேறியுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக மதுரை, நாமக்கல், நாகை ஆகிய மாவட்டங் களில் தேர்வு எழுத வந்தவர்களுக்கு உரிய இடம் ஒதுக்கித் தரப்படாதது, சர்வர் இயங்காதது, அதேபோன்று காலதாமதமாக தேர்வை துவக்கியது இப்படி ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்  மற்றும் அரசின் மெத்தன போக்கும், அலட்சியப் போக்கும் தேர்வு எழுத வந்த மாணவர்களை மேலும் மன  உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடிய வேலையை செய்திருப்பது கடுமை யாக கண்டிக்கத்தக்கது. எனவே, தமிழக அரசும் ஆசிரியர் தேர்வு வாரிய மும் இதுபோன்ற தேர்வுகளை நடத்து கின்ற பொழுது முறையான முன்னேற்பாடு தயாரிப்புப் பணிகளை செய்ய வேண்டும். மேலும், முதுகலை கணினி ஆசிரியர்  நிலை ஒன்றுக்கு நடத்தப் பட்ட தேர்வை  முழுமையாக ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறார்கள். 

;