சென்னை, ஜூன் 1- முதுகலை மருத்துவப்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடங்க ளை வழங்காமல் சமூக நீதியை மறுக்கும் மத்திய மோடி அரசுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் இந்தியா முழுவதும் 535 உள்ளது. இக் கல்லூரிகளில் ஒவ்வொரு வருடமும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும். நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும் இந்த எம்.பி.பி.எஸ் இடங்களில் 85 சதவீதம் மாநில அரசுக்கும் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடாகவும் வழங்கப்பட்டு வருகிறது. முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சத வீதம் மாநில அரசுக்கும் 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடாகவும் நிரப்பப்பட்டு வருகிறது.
2017 ஆம் ஆண்டில் இருந்து மாநில அரசாங்கங்களின் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய இடஒதுக்கீடு ஓபிசி மாண வர்களுக்கு வழங்கப்படாமல் மறுத்து வருகிறது மத்திய பாஜக அரசு. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீடு 27 சதவீதம் என்பது அடிப்படை உரிமையாகும். கடந்த மூன்று வருடங்களாக பல ஆயி ரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மாணவர்க ளுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டு வருவதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டிக்கிறது. இடஒதுக்கீட்டை தொடர்ந்து அமல் படுத்தாமல் இருப்பது அப்பட்டமான சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கையாகும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டரீதியாக உத்தர வாதப்படுத்திய சமூகநீதியை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்புள்ள மத்திய அரசு அதனை செயல்படுத்த மறுப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் சாசனத்தை பின்பற்றுவதாக வாக்குறுதி அளித்து பதவியேற்ற ஆட்சியா ளர்கள் அதை நடைமுறைப்படுத்த மறுப்பது தேச மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகும்.இத்தகைய சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு கைவிட வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் (2017 -2020) முதுகலை எம்டி/எம்.எஸ் - 5152, முது கலை டென்டல் எம்.எஸ் -188, இளங்கலை (எம்பிபிஎஸ்)-3207, இளங்கலை டென்டல் (பிடிஎஸ்) - 251 என்று கிட்டத்தட்ட 8798 இடங்கள் ஓபிசி மாணவர்களுக்கு மறுக்கப் பட்டு பொது பிரிவின் அடிப்படையில் மாண வர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை 2020-21 இல் பின்பற்ற மத்திய அரசு முயற்சித்து வரு கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இதே கொள் கையை பின்பற்றினால் இந்த ஒரு வரு டத்தில் மட்டும் முதுகலை மருத்துவப் படிப்பில் 440 இடங்கள் ஓபிசி மாணவர்களு க்கு கிடைக்க வேண்டியது மறுக்கப்படும் அபாயம் உள்ளது. இதை உடனடியாக தடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. எனவே மருத்துவக் கல்வியில் இடஒதுக் கீட்டின் அடிப்படையில் இதர பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய கல்விக்கான உரிமையை பறிக்காமல் இட ஒதுக்கீட்டை சரியாக மத்திய அரசு அமல் படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.