ஆசிரியர். ஜீவானந்தம், மீரா ஜீவானந்தம் ஆகியோரின் இல்ல திருமண விழா பண்ருட்டியில் நடைபெற்றது. மணமகன் ஜி. அருண், மணமகள் ஜெ. ஐஸ்வர்யா திருமணத்தை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையேற்று நடத்தி வைத்தார். நகரச் செயலாளர் இரா. உத்திராபதி வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில், மாநில பொதுச் செயலாளர் கே.பாலசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.மாதவன், எஸ்.துரைராஜ், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் முன்னாள் பொருளாளர் தி .கண்ணன், மோசஸ், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மணிமேகலை, மாநிலப் பொருளாளர் ஜோதி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் மணமக்களை வாழ்த்தினர்.