சென்னையில் மழை நீடிக்கும்
சென்னை, ஆக. 23- சென்னை உள்பட வட மாவட்டங்களில் ஞாயிறு காலை வரையில் மழை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், மயிலாடு துறை காரைக்கால், நாகப்பட்டினம், உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். 25-ந் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி யால் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் 26, 27, 28 29 ஆகிய நாட்க ளில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மித மான மழைக்கும் வாய்ப்பு ள்ளது. இந்த மாத இறுதி யில் மீண்டும் மழைக்கான வாய்ப்பும் உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவாவது பலத்த மழையை கொடுப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாக வெதர் மேன் தெரிவித்துள்ளார்.
வண்டி பாளையத்தில் நெசவு தொழிலாளி படுகொலை
கடலூர், ஆக.23- கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் மனோகர் (வயது 54), நெசவு தொழிலாளி. இவர் கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள தனியார் நெசவு பட்டறையில் பணியாற்றி வந்தார். மனோகர், வேலைக்கு செல்லும் போது தனது மோட்டார் சைக்கிளை நெசவு பட்டறை அருகில் உள்ள பொம்மை தயாரிக்கும் வேலை செய்யும் கார்த்திகேயன் என்பவரது வீட்டின் அருகே நிறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதுதொடர்பாக மனோகருக்கும், கார்த்திகேயனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இன்று மனோகர் வழக்கம் போல் வேலைக்கு வந்தார். இந்த நிலையில் மாலை மீண்டும் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கார்த்திகேயன் அதே பகுதியை சேர்ந்த 2 பேருடன் சேர்ந்து மனோகரை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே மனோகர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கார்த்திகேயன் உள்ளிட்ட 3 பேரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கன்வாடி மைய சுவர் இடிந்து சேதம்
வேலூர், ஆக.23– வேலூர் மாவட்டத்தில் வெள்ளி ( ஆக 22) நள்ளிரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பேரணாம்பட்டு அடுத்த சாலைப் பேட்டை பகுதியில் அங்கன்வாடி மையம் சிதலமடைந்ததால் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.இதில் சுமார் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதனிடையே கனமழை பெய்த காரணத்தால் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தின் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து சேதமானது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்
திருப்பத்தூர், ஆக. 23- பெண்களுக்கு எதிரான குற்றங் களை தடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. திருப்பத்தூர் நகராட்சி புதுப்பேட்டை ரோடு பகுதியில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஆண்டாள், முன்னாள் மாவட்டச் செயலாளர் இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் சங்கரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த கூட்டத்தில்பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் வேண்டும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கும் வெளி நோயாளி களுக்கும் மருத்துவ சேவை வழங்க போதிய டாக்டர்கள் செவிலியர்கள் பணி யில் அமர்த்தப்பட வேண்டும், திருப்பத்தூர் நகரத்தில் சாலைகளை சீர்படுத்த வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கிளைத் தலைவராக கலைச்செல்வி, செயலாளராக சத்யா, பொருளாளராக கோமதி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.