“வேளச்சேரி பகுதியில் ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் நிறுத்தங்கள் 60 உள்ளன. இவற்றில் 600 பேர் உறுப்பி னர்களாக உள்ளனர். இவர்களில் 273 பேர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். அரசு அறிவித்த நிவாரண தொகுப்பு பெற தகுதியான 156 பேரில், 103 பேருக்கு மட்டுமே நிவாரணத் தொகை கிடைத்தது. சிறுசிறு காரணங்களால் 53 பேருக்கு நிவாரணத்தொகை மறுக்கப் பட்டது. எனவே, 53 பேருக்கும் மறுவிண்ணப் பம் செய்துள்ளோம். அதேசமயம் அரசு அறி வித்த உணவு நிவாரணத்தை 600 பேருக்கும் பெற்றுக் கொடுத்துள் ளோம்” என்று அச்சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் துர்க்கை பிரசாத் கூறினார். தமிழகத்தில் 2 லட்சத்து 83 ஆயிரம் ஆட்டோ பர்மீட்டுகள் உள்ளன. இவர்களில் 40 ஆயிரம் பேர்தான் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். நலவாரிய உறுப்பினர்களில் 24 ஆயிரத்து 630 பேருக்குதான் அரசு அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கொடுக்க உள்ளனர்.
அதி லும் ஒருபகுதியினருக்குதான் தற்போதுவரை கொடுத்துள்ளனர். இதற்கு மாறாக, ஓட்டுநர்கள் அனைவருக்கும் கொடுத்தது போன்ற தோற்றத்தை அரசு உருவாக்குகிறது. இது தவறானது என்றும் அவர் கூறினார். சென்னையில் 80 ஆயிரம் பர்மீட்டுகள் உள்ளன. ஆனால் 13 ஆயிரத்து 863 பேர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 5843 பேருக்குதான் நிவாரணம் கொடுக்க உள்ளார்கள். எனவே, கேரளா, கர்நாடக, ஆந்திரபிரதேசம் போன்று ஆட்டோ பர்மீட் வைத்துள்ள அனை வருக்கும் நிவாரணத் தொகுப்பை தர வேண்டும். ஆட்டோக்கள் இயங்காத 3 மாத காலத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் 15 ஆயிரம் ரூபாய் நிவா ரணம் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புது ஆட்டோக்களுக்கு 7 விழுக்காடு, லைசன்ஸ் கட்டணத்தில் ஒரு விழுக்காடு, இன்சூரன்ஸ், பர்மீட் புதுப்பித்தலில் தலா 3 விழுக்காடு என தொகை பிடித்தம் செய்யப்பட்டு நலவாரிய நிதிக்கு தரப்படு கிறது. இதன்படி 14 கோடி ரூபாய் அரசிடம் உள்ளது. அந்த பணத்தி லிருந்துதான் நிவாரண தொகுப்பை தருகிறார்கள். இதன்படி 15கிலோ அரிசி, ஒரு லிட்டர் எண்ணை, ஒரு கிலோ பருப்பு உணவு தொகுப்பிற்கு 760 ரூபாய் என விலை நிர்ணயித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தகுதிச்சான்று (எப்சி), இன்சூரன்ஸ், பர்மிட் புதுப்பித்தல் போன்ற வற்றிற்கு காலஅவகாசம் வாங்க வேண்டும்.காவல்துறை எல்லையை கணக்கில் கொண்டு நலவாரிய உறுப்பினர் பதிவை செய்ய வேண்டும், ஆட்டோக்களுக்கான தவணைத் தொகையை கட்டுவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று துர்கை பிரசாத் கோரிக்கை விடுத்தார்.