tamilnadu

img

வேலை, உதவித்தொகை கேட்டு மாநிலம் முழுவதும் போர்க்கோலம்... அரசு அலுவலகங்களில் குடியேறி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்...

சென்னை:
அரசுத்துறைகளில் பணி வழங்க வேண்டும். உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பிப்ரவரி 9 செவ்வாய்க்கிழமையன்று தமிழகம் முழுவதும் 200 அரசு அலுவலகங்களில் குடியேறி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சுமார் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.இவர்களில் படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்து, வேலைக்காக சுமார் 1.10 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு அரசுத் துறைகளில் 4 சதவீத பணிகளை சட்டப்படி முழுமையாக வழங்கமத்திய, மாநில அரசுகள் மறுக்கின்றன. அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை 3 மாத காலத்திற்குள் நிரப்ப 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற முதன்மை அமர்வுஉத்தரவிட்டது. அதனை நிறைவேற்றியது குறித்து தமிழக அரசு எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016 இன் படி, தனியார்துறை பணிகளில் குறைந்தபட்சம் 5 சதவீதத்தை வழங்க வேண்டும். ஆனால், சட்டம் அமலுக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த பின்னரும் தமிழக அரசு அதனை அமல்படுத்தவில்லை.தெலுங்கானா, புதுச்சேரி, கேரளாவுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை குறைவு. மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையும் மிகமிகக் குறைவாக வழங்கப்படு கிறது. பெரும்பாலானோருக்கு கடந்த பத்தாண்டுகளாக ஆயிரம்  ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.  எனவே, மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி தனியார் துறை பணிகளில்குறைந்தபட்சம் 5 சதவீத பணிகளை உத்தரவாதப்படுத்த வேண்டும். மாத பராமரிப்பு உதவித் தொகையை குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாயாகவும், கடும் ஊனமுற்றோருக்கு 5 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

ஆணையர் அலுவலகத்தில்
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், துணைத் தலைவர் பாரதி அண்ணா, மத்திய சென்னை மாவட்டத் தலைவர்சுரேந்திரன், செயலாளர் எஸ்.மனோன்மணி ஆகியோர்  தலைமையில் குடியேறி, சமைக்க தொடங்கினர்.

அப்போது செய்தியாளர்களிடம்  எஸ்.நம்புராஜன் கூறுகையில், “ மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016-ல் தெரிவிக்கப்பட்ட பல விதிகளை அதிமுக அரசு அமல்படுத்தவில்லை. அரசு துறைகளில் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களைக் கூட முழுமையாக நிரப்பவில்லை. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றும் அரசாக உள்ளது. எனவே, 185-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் குடியேறி போராட்டத்தை நடத்தி வருகிறோம். இதில் சுமார் 30 ஆயிரம் பேர் 
கலந்து கொண்டுள்ளனர்.முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் தலையிட்டு கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். அரசுஅலுவலகங்களில் இருந்து

தொடர்ச்சி 3ம் பக்கம்... 
 

;