tamilnadu

img

போக்குவரத்து கூட்டுறவு சங்க இயக்குநர்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம் வெற்றி

சென்னை:
சென்னை மற்றும் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.96 கோடியை உடனே பிரித்து வழங்க கோரி சிஐடியு , தொமுச தொழிற்சங் கங்கள் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு வியாழனன்று (செப்.3) போக்குவரத்து  கூட்டுறவு சங்க இயக்குநர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.   

போக்குவரத்து கழக பணியாளர் கள் கூட்டுறவு கடன் (எக்ஸ் - 367) சொசைட்டிக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகிய கழகங்களை சார்ந்த பணியாளர்கள் சுமார் 9,000 பேர் உறுப்பினர்களாக சேர்ந்து கடன் பெற்று பயன் அடைந்து வருகின்றனர். இவர்கள் பெற்ற கடனுக்கு பிரதி மாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப் பட்டு வருகிறது. அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட பணத்தினை  போக்குவரத்து கழகங்கள் சொசைட்டிக்கு செலுத்தாமல் ஒரு வருடகாலமாக நிலுவை வைத்துள்ளது . இதுநாள் தேதிவரை போக்குவரத்துக் கழகங் கள் செலுத்தாமல் நிலுவை வைத் துள்ள தொகை மாநகர போக்குவரத்து கழகம் சுமார் ரூ. 54 கோடியும், விழுப்புரம் கோட்டம் சுமார் 42 கோடி ஆக ரூ. 96 கோடியாக உள்ளது. கூட்டுறவு சொசைட்டியோ,  சென்னைமத்திய கூட்டுறவு வங்கிக்கு ரூ.96 கோடி நிலுவை தொகைக்கும்சேர்த்து மாதா  மாதம் வட்டி செலுத்திவருகிறது. இதனால் சொசைட்டிக்குஇழப்பு ஏற்படுவதோடல்லாமல் முக்கிய பணிகளான சொசைட்டி உறுப்பினர்களின் அவசர அத்தியாவசிய மற்றும் பள்ளி கல்லூரி படிப்பு கட்டண தேவைகளுக்காக கடன் மனுஅளிப்பவர்களுக்கு இந்த பெருநோய்தொற்று உள்ள காலத்தில்  கடன் வழங்க இயலாமல் முழுவதும் முடங்குவதால் சொசைட்டி உறுப்பினர்கள்மிகவும்  பாதிப்புக்குள்ளாகின்றனர். சொசைட்டியின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது. சொசைட்டிஉறுப்பினர்களிடமிருந்து பிடித்தம்செய்த பணத்தினை போக்கு வரத்துக் கழகங்கள் உடனடியாக நிலுவையின்றி வட்டியுடன் செலுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி சிஐடியு, தொமுச உள்ளடக் கிய அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் சொசைட்டி இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த  காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.இதன் விளைவாக சிஐடியு, தொமுச தலைவர்களுடன்  அரசு போக்குவரத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகரபோக்குவரத்துக் கழக நிர்வாகம் சொசைட்டிக்காக தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகை 54 கோடியினை உடனே வழங்க வேண்டும்,  பிரதிமாதம் பிடித்தம் செய்த தொகைகளை கூட்டுறவு சட்ட விதிப்படி 7 தினங் களுக்குள் செலுத்தி உத்தரவாதப் படுத்த வேண்டும்,  மாநில அரசு தொழிலாளர்களின்  பிரச்சனையில் உடனே 
தலையிட வேண்டும் என பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டது.

தேனாம்பேட்டை கூட்டுறவு நாணய சங்கத்தலைவர் துரை, சிஐடியு மாநில துணைச்செயலாளர்  ஆறுமுகநயினார், மாநகர பொதுச்செயலாளர் தயானந்தன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், தொமுச பேரவைப்பொருளாளர் கி.நடராசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியஆறுமுகநயினார், போக்குவரத்து உயர்அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பயனாக முதற்கட்டமாக, வியாழன்று மாலைக்குள் ரூ. 30 கோடியை இரண்டு தவணையாக கொடுப்பதாகவும், மீதத்தொகையை படிப்படியாக வழங்குவதாக ஒப்புதல் அளித் துள்ளனர். இதே போன்று விழுப்புரத்தில் மேலாண்மை இயக்குநர் வாக்குறுதி அளித்துள்ளார். இது நமது ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.

;