tamilnadu

img

மூன்றாம் பாலினத்தவர் தையல் தொழிற் கூட்டுறவுச் சங்கம்

சென்னை, மார்ச் 21 - மூன்றாம் பாலினத்தவரை உறுப்பினராகக் கொண்ட “மூன்றாம் பாலினர் தையல் தொழிற்கூட்டுறவுச் சங்கம்” உருவாக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் வீ.சரோஜா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சனிக்கிழமையன்று (மார்ச் 21) நடைபெற்ற தமது துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசினார். அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மண்டல மறுவாழ்வு மைம் அமைக்கப்படும். 12 பள்ளிகளில்  ஒலி மற்றும் பிரெய்லி எழுத்து வடிவ தொடு உணர்வுடன் நவீனவசதி கொண்ட திறன் வகுப்பறைகள் அமைக்கப்படும் என்றார்.

3 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு பூத்தையல் வேலைப்பாடு வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தையல்  எந்திரம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளி வழக்கறி ஞர்கள்பதிவு செய்ய, சட்டப்புத்தகங்கள் வாங்க  வழங்கப்ப டும் உதவித்தொகை 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சீ.வளர்மதி அறிவிப்புகளை வெளி யிட்டு பேசுகையில், விடுதிகளில் பணிபுரியும் பகுதிநேர துப்புரவு பணியாளரளுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும். 425 விடுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா  பொருந்தப்படும் என்றார்.