tamilnadu

img

பெண்கள் மீதான வன்முறையை ஆண்களும் கூட்டாக எதிர்க்க வேண்டும்

சென்னை, டிச. 4 - பெண்கள் மீதான வன்முறையை ஆண்களும், பெண்களும் கரம்கோர்த்து எதிர்க்க வேண்டும் என்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செய லாளர் மரியம் தாவ்லே அறைகூவல் விடுத்துள்ளார். வன்முறையற்ற, போதையற்ற தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நவ.25 முதல் டிச.4வரை  400கிமீ பிரச்சார நடை பயணம் நடைபெற்றது. வடலுர், திருவண்ணாமலையிலிருந் நவ.25 அன்று பிரச்சாரத்தை தொடங்கிய நடைபயணக்குழு நவ.3 அன்று தாம்பரத்தை வந்தடைந்தது. இந்த பயணக்குழுக்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் வர வேற்பளிக்கப்பட்டது. இதனை யொட்டி நடைபெற்ற பொதுக்கூட்ட த்தில் மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் மரியம்தாவ்லே பேசுகையில், “2019ம் ஆண்டின் தொடக்கத்தை கேரளத்தில் பெண்கள் சுவர் எழுப்பி தொடங்கி னர், அதை தமிழகத்தில் நடைபயண மாக முடித்து வைத்துள்ளீர்கள். மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு டிச.27-30 தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது. அதில் ‘வன்முறையற்ற, பசியற்ற இந்தியா’ என்ற கருத்தாக்கம் விவாதப் பொருளாக இருக்கும்” என்றார். “பெண்கள் மீதான வன்முறையை ஆண்களும், பெண்களும் கரம்கோர்த்து எதிர்க்க வேண்டும். பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடு கிறவர்களை ஆட்சியாளர்களே பாதுகாக்கின்றனர். மாதர் சங்கம் நடத்தியுள்ள இந்த நடைபயணம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரண மாக இருக்கும். மாதர் சங்கதின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கும் வரை அவர்களை தூங்க விடக்கூடாது” என்றும் அவர் கூறினார்.

தாய்குரிய பாசத்தோடு...
சிபிஎம் சிபிஐ இரு கட்சிகள் சார்பாகவும், என்.சங்கரய்யா சார்பாகவும் நடைபயணக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறிய இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, “மாதர் சங்கத்தின் பயணம் லட்சிய பயணம். மனித வாழ்க்கையில் உள்ள தீங்குகளான பாலியல் வன்முறை, போதை இல்லாத சமூகம் அமைய நடைபெறும் பயணம் நிச்சயம் வெற்றி பெறும். காதல், கற்பு, வீரம் ஆகியவற்றை போற்றி வளர்த்த தமிழகத்தில் இன்று பெண்கள் வாழ முடியவில்லை. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது” என்றார். “தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 100 கோடி ரூபாய் அதிகமாக மதுபானம் விற்றுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 47 விழுக்காட்டினர் குடிகாரர்களாக மாறி விட்டனர். தீபாவளி, பொங்கல், விடுமுறை நாட்களில் இலக்கு வைத்து அரசு மதுபானம் விற்கிறது. மது, பாலியல் வன்முறை இரண்டும் அதிகரித்தால் தமிழ்ச் சமுதாயம் பாழாகிவிடும். தாய்க்குள்ள பாசத்தோடு, இரண்டு கோரிக்கை களை முன்வைத்து மதுரையில் கண்ணகி நீதி கேட்டதுபோல், 400 கி.மீ. தூரம் லட்சப்பயணம் மேற்கொண்டு ள்ளீர்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றும் அவர் கூறினார்

குடும்ப வன்முறைக்கு அடிப்படை மது
உலக பாலியல் சுகாதார மையம் சார்பில் பேசிய மருத்து வர் ஜெயராணி காமராஜ் “ 10-70 வயது வரை உள்ள பெண்களில் 76 விழுக்காடு பேர் ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்புறுத்த லுக்கு ஆளாகி இருக்கின்றனர். ஏதாவது ஒரு வகையில் பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக 85 விழுக்காடு ஆண்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஒவ்வொரு 12 நிமிடத்திற்கும் ஒரு பெண், தன்னுடைய உறவினர்க ளால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். வீடுகளும் பாதுகாப்பானதாக இல்லை. 76 விழுக்காடு குடும்ப வன்முறைக்கு மதுதான் காரணமாக உள்ளது” என்றார். மாதர் சங்கத்தின் இந்த நடை பயணம் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். உலக பாலியல் சுகாதார மையத்தின் பிரதிநிதி என்ற வகையில், இந்த நடைபயணத்தை, உலகளவில் கொண்டு செல்வேன் என்றும் அவர் கூறினார். தென்சென்னை மாவட்டச் செய லாளர் வெ.தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கல்வியாளர் வே.வசந்திதேவி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு, சங்கத்தின் அகில இந்திய தலைவர் மாலினி பட்டாச்சார்யா, துணைத்தலைவர் உ.வாசுகி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச்செயலாளர் பி.சுந்திர் மாவட்டத் தலைவர் எஸ்.சரவண செல்வி, பொருளாளர் வே.சித்ரகலா, ஏ.பிரேமா உள்ளிட்டோர் பேசினர்.