சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
விழுப்புரம், ஜூன் 5- மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சி யர் அண்ணாதுரை அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டில் தோட்டக்கலைத்துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் துணைநீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியத்திலும், இதர விவ சாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்திலும் நுண்ணீர் பாசன கருவிகள், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் அங்கீ கரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனங்க ளின் மூலம் வயல்களில் அமைத்து தரப்படுகிறது. இந்த திட்டத்திற்கு இந்தாண்டு பொருள் இலக்காக 7,200 ஹெக்டேரும், நிதி இலக்காக ரூ.50 கோடியே 40 லட்சமும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இந்த திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாச னக் கருவிகள், தெளிப்பு நீர் பாசனக் கருவி கள், மழை தூவான்கள் போன்ற உபகர ணங்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சொட்டு நீரிலும் அதிக மகசூல் மற்றும் வரு வாய் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி, மஞ்சள், வாழை, காய்கறிகள், தர்பூசணி, அனைத்து வகை பழ மரங்கள், கோலியஸ், மலர்கள் ஆகிய வற்றை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நுண்ணீர் பாசன கருவி களை அமைத்துக்கொள்ளலாம்.
துணைநீர் பாசன மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் பாது காப்பான இடங்களில் ஆழ்குழாய் அல்லது திறந்தவெளி கிணறுகள் அமைப்பதற்கு ரூ.25 ஆயிரம் மானியம், மின் மோட்டார் அல்லது டீசல் என்ஜின் வாங்குவதற்கு ரூ.15 ஆயிரம் மானியம், பாசன நீர் எடுத்து செல்வ தற்கான பி.வி.சி. குழாய்கள் வாங்கிட ரூ.10 ஆயிரம் மானியம் மற்றும் நீர் சேகரிப்பு அமைப்புகளை அமைத்துக்கொள்ள அதிக பட்சமாக ரூ.40 ஆயிரம் என்ற அளவில் மானியம் வழங்கப்படுகிறது. இந்த 2 திட்டங்களிலும் மானியம் பெறுவ தற்கு விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்து டன் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல், வயல் வரை படம், மண் மற்றும் நீர் மாதிரி அறிக்கைகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகிய வற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விவ சாயியால் தேர்வு செய்யப்படும் நுண்ணீர் பாசன நிறுவனத்தின் மூலம் உபகரணங்கள் வழங்கப்பட்டு நிலங்களில் பொருத்தி தரப்படும். இந்த திட்டங்கள் குறித்து கூடுதல் விவ ரங்களுக்கு விழுப்புரம் தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு 87 வயது முதியவர் பலி
கடலூர், ஜூன் 5- கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 87 வயது முதியவர் இறந்ததைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 468 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 36 பேர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூர் தண்டபாணி நகரைச் சேர்ந்த 87 வயது முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையின் ஆய்வக உதவியாளராக பணியாற்றும் அவரது பேத்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது குடும்பத்தினர் 5 பேருக்கும் கடந்த மே 28ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையை சேர்ந்த 49 வயது பெண் ஒருவர் கொரோனா பாதிப்பினால் மே 12ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் ஏண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 435 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.