tamilnadu

மக்களவைத் தேர்தல் இரண்டாவது விடுதலைப் போராட்டம்!

விக்கிரவாண்டி,ஏப்.5- மக்களவைத் தேர்தல் இரண்டாவது  விடுதலைப்போராட்டம் என்றும் இடஒதுக்கீடு முறை தொடர வேண்டும் என்றால் ஒன்றியத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டியில் வெள்ளிக்கிழமை (ஏப்.5) நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொது க்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் விழுப்புரம்(தனி) தொகுதி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் தொகுதி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியே இருவரையும் அறிமுகப்படுத்தியும் வாக்குகள் கோரியும் அவர் உரை யாற்றினார்.

அவரது உரையின் சுருக்கம் வருமாறு: இந்தத் தேர்தல் இரண்டாவது விடு தலைப் போராட்டம்! ஏன் என்றால், இன்றைக்கு நாடு மிகப்பெரிய ஆபத் தில் சிக்கியிருக்கிறது! பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட – பட்டி யலின – பழங்குடியின – சிறுபான்மையி னர் இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தி ருக்கிறது. ஆபத்து என்றால், எப்படிப் பட்ட ஆபத்து? உதாரணத்திற்கு இரண்டு மட்டும் சொல்கிறேன். நாட்டை நிர்வகிக்கும், ஒன்றிய அரசு  செயலாளர்களில் 3 விழுக்காடு கூட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் இல்லை! அதேபோல், ஒன்றிய அரசின்  உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கும் பேராசிரியர் – உதவிப் பேராசிரியர் போன்ற பணிகளில் – இப்போதும் இதர பிறப்படுத்தப்பட்ட சமூகங்களையும் – பட்டியலின – பழங்குடியின சமூகங்க ளையும் சேர்ந்தவர்கள் இடஒதுக்கீடு முறையில் தேர்வாவது இல்லை! இதைப் பற்றி, எதிரில் கூடியிருக்கும் நீங்கள் சிந்தித்தாக வேண்டும்! உங்க ளில் பலரும் இப்போது படித்திருப் பீர்கள்.

ஆனால், உங்கள் அப்பா–அம்மா, அவர்களின் அப்பா-அம்மா வைப் பற்றி யோசித்துப் பாருங்கள்! எதிர்காலத்தில், உங்கள் குழந்தைகள் படிக்க வேண்டாமா? நல்ல வேலைக்குச் செல்ல வேண்டாமா? கடந்த இரண்டு, மூன்று தலைமுறையாகத்தான் நாம் படித்து முன்னேறி வருகிறோம். நல்ல மரியாதையான வேலைகளுக்கு வந்தி ருக்கிறோம். இதற்கு என்ன காரணம்? நாங்கள் போராடிப் பெற்ற இடஒதுக்கீடும்; சமூக நீதியும்தான்! இன்னும் நமக்கான பிரதி நிதித்துவம் சரியாக – முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு யார் காரணம்? பா.ஜ.க.! இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து உண்டாக்குகிறார்கள், ஏன்? ஒவ்வொருமுறையும் “இடஒதுக்கீடு எங்கள் உரிமை” என்று போராட வேண்டியிருக்கிறது, ஏன்? ஏன் என்றால், ஒதுக்கீட்டிற்கும், சமூகநீதிக்கும் முற்றி லும் எதிரான கட்சி, பா.ஜ.க! பா.ஜ.க. மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் இடஒதுக்கீடு முறை இருக்காது! சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டிவிடுவார்கள்! நம்முடைய மக்களை, நூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துவிட்டுச் சென்று விடுவார்கள்! இதற்காகத்தான் நாம் பா.ஜ.க.வை எதிர்க்கிறோம். சமூக நீதி குறித்த நம்முடைய முழக்கம் – தேசிய இயக்கங்களில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது...

நம்முடைய கோரிக்கையை ஏற்று, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,  ”இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், நாடு முழுவதும் சமூக – பொருளாதார - சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50 விழுக்காடு என்பதை உயர்த்த  சட்டத்திருத்தம் செய்யப்படும். எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினருக்கான காலிப் பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப் பப்படும் என்று” அறிவித்திருக்கிறார்.  

காங்கிரஸ் கட்சி வெளியிட்டி ருக்கும் தேர்தல் அறிக்கை – நம்முடைய நாட்டைப் படுகுழியில் தள்ளிய பா.ஜ.க. விடமிருந்து மீட்கும் தேர்தல் அறிக்கை!  நூறாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல பா.ஜ.க. தீட்டியிருக்கும் திட்டங் களுக்குத் தடைபோடும் தேர்தல் அறிக்கை! இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டுபோய் மீண்டும் வளர்ச்சியை ஏற்படுத்த இருக்கும் தேர்தல் அறிக்கை! பா.ஜ.க. இதுபோல வாக்குறுதி கொடுத்திருக்கிறதா? அதனால்தான், நான் உங்களைச் சந்திக்கும்போதெல்லாம் - இது மிக மிக முக்கியமான தேர்தல் என்று சொல்லிக்கொண்டு வருகிறேன். இது,  இந்திய ஜனநாயகத்தை மீட்கும் தேர்தல்! சர்வாதிகாரத்தை விரட்டி யடிக்கும் தேர்தல்! சமத்துவம் - சகோத ரத்துவம் - மத நல்லிணக்கம் – நம்முடைய உயிர்மூச்சான சமூகநீதிக் கொள்கை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டிய தேர்தல்! சமூகநீதியை நிலைநாட்டப் போராடும் நமக்கும் - சமூக அநீதியை இழைத்து வரும்  பா.ஜ.க. கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல்! மொத்தத்தில் இந்தியாவைப் பாதுகாக்க இந்தியா கூட்டணியை உறுதியாக வெற்றி பெறச் செய்ய வேண்டிய தேர்தல்!

நம்முடைய நாட்டை மத – இன – சாதி - மொழி அடிப்படையில் பிளவுபடுத்தி இட ஒதுக்கீட்டை இரத்து செய்யப் பத்தாண்டு கால ஆட்சியில் எல்லாவற்றையும் செய்தது மோடி அரசு! தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்பு திட்டத்தைக்கூட கொடுக்காமல் வஞ்சித்தது மோடி அரசு! சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று சொல்லும் கட்சி, பா.ஜ.க. அந்தக் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது யார்? ராமதாஸ் தன்னுடைய உயிர் என்று அவர் சொல்லிக் கொள்ளும் சமூகநீதி கொள்கை க்குப் பரம எதிரியான பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்து, அவர்களுடைய வேட்பா ளர்களையும் பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் போற்றிப் புகழ்கிறாரே! சில நாட்களுக்கு முன்பு வரை என்ன சொன்னார்? மோடி ஆட்சிக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் அய்யா ராமதாஸிடம் நிருபர் கேள்வி கேட்ட போது, “சைபருக்கும் கீழ் ஒன்றும் இல்லை!  இருந்தால், அதைதான் கொடுப்பேன்” என்று சொல்லி, பா.ஜ.க.வைக் கடுமையாக விமர் சித்தார். ஆனால், இப்போது அவர்களோடு கூட்டணி வைத்திருக்கிறார்? இந்த சந்தர்ப்ப வாதக் கூட்டணியின் ரகசியம் அவருக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறார்… யாமறியேன் பராபரமே! ஆனால்… அவரைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும்! அதனால், இதைப் பற்றி விளக்க மாகப் பேச விரும்பவில்லை! அமைய வுள்ள இந்தியா கூட்டணி அரசு, நிச்சயம் சமூக நீதி அரசாக இருக்கும்!

இந்த விடுதலைப் போரில் இந்திய மக்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், எதிரி களை அடையாளம் காண்பது மட்டுமல்ல – துரோகிகளையும் சேர்த்தே அடையாளம் காண வேண்டும்! எதிரிகளையும் - துரோகி களையும் விரட்டியடிக்க வேண்டும்! பா.ஜ.க. வுக்கு சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் தக்க பாடம் புகட்ட வேண்டும்! எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. – அதற்குத் துணைபோகும் பா.ம.க. - தமிழ் நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. – ஆகிய துரோகிக் கட்சிகளை ஒருசேர வீழ்த்துங்கள்!

விழுப்புரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் முனை வர். ரவிக்குமாருக்கு பானை சின்னத்திலும் - கடலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத் துக்கு கை சின்னத்திலும் நீங்கள் வாக்க ளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன். சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.