tamilnadu

img

ஜனநாயக சக்திகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: எஸ்எப்ஐ

சென்னை:
10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்புசெய்துள்ளது  அனைத்து ஜனநாயக சக்திகளின் போராட்டத்திற்கு  கிடைத்த வெற்றி என்று இந்திய மாணவர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்றுகல்வியாளர்கள், மாணவர்கள், மருத்து வர்கள், பெற்றோர்கள் என அனைவரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில் இந்திய மாணவர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுத்துள்ளன. அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழக அரசின் மீது சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தது.

இந்திய மாணவர் சங்கம் களத்திலும் நீதிமன்றத்திலும் உறுதியாக நின்று தொடர்ந்து போராடி வந்தது. இந்நிலையில்  தமிழக அரசு ஜூன் 15 அன்று நடக்கவிருந்த  பத்தாம்வகுப்புப் பொதுத் தேர்வையும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் முழுமையாக ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது.இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்த,இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டங் களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து ஜனநாயக அமைப்புகளுக்கும், மாணவர் நலனில் அக்கறை கொண்ட ஜனநாயக எண்ணம் படைத்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெறிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;