சதுரங்க போட்டியில் வீனஸ் பள்ளி முதலிடம்
அரியலூரில் மகாத்மா யூத் கிளப் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியிலும், திருச்சியில் பிளாக் குவாட் சதுரங்க அகாடமி நடத்திய மாநில அளவிலான சதுரங்கப் போட்டியிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் பயிலும் 5 ஆம் வகுப்பு மாணவி எஸ்.பிரகதா இரு போட்டிகளிலும் முதலிடம் பிடித்தார். அவருக்கு வீனஸ் குழும பள்ளிகளின் நிறுவனர் வீனஸ் குமார், பள்ளியின் தாளாளர் ரூபியாள் ராணி, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.