tamilnadu

செங்குன்றம் ,புதுச்சேரி மற்றும் திருவள்ளூர் முக்கிய செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்

வேளச்சேரி ஏரிப்பாதுகாப்பு இயக்கம் முதலமைச்சருக்கு மனு
சென்னை, ஜூலை 1 - வேளச்சேரி ஏரி ஆக்கிர மிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று வலியுறுத்த ப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேளச்சேரி ஏரிப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ரீட்டா ராமகிருணணன், பொதுச் செயலாளர் வெ.காமாட்சிசுந்தரம் ஆகி யோர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வேளச்சேரி ஏரி 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. பல ஆண்டுகளாக ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படவில்லை. கழிவு குப்பைகள் கொட்டப்படுவ தோடு கழிவு நீர் ஏரியில் விடப்படுகிறது. ஏரியின் மையப் பகுதியில் சிறுசிறு மண்மேடுகளும் புல்வெளி களும் உருவாகி உள்ளன. 2015 வெள்ளத்தின் போது பழுதடைந்த தடுப்பு கதவுகள் புதுப்பிக்கப்பட வில்லை. ஏரி பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கை களை எடுக்கவில்லை. இதனால் பைபாஸ் சாலைக்கு கிழக்கு பகுதி யில் உள்ள ஏரியில் மண் கொட்டி ஆக்கிரமித்து வரு கின்றனர். வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்க ப்பட்டு நீர்வரத்து தடுக்கப்பட்டுள்ளது.  எனவே, மக்களின் நீரா தாரத்தை பாதுகாக்க, கிழக்கு பகுதியில் நடைபெறும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை தூர்வாரி, சுற்றுச்சுவர் அமைத்து, நீர்வரத்து வழிகளை பாது காக்க வேண்டும். பைபாஸ் சாலையின் மேற்கு பகுதியில் உள்ள ஏரிக்கும் சுற்றுச்சுவர் அமைப்பதோடு குப்பை கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். ஏரியின் மேற்கு, வடக்கு பகுதி, கிண்டி ரேஸ் கோர்ஸ், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் வரத்து கால்வாய்களை கண்டறிந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றி, மூடப்பட்ட கால்வாய்களை ஏற்படுத்த வேண்டும். ஏரியின் உடைந்த கதவுகளை புதுப்பிக்க வேண்டும். தூர்வாராததாலும், குப்பை கொட்டி, கழிவு நீர் கலக்கப்பட்டதாலும் சுமார் 10 அடி ஆழம் தூர்ந்து போய் உள்ளது. ஆகவே, ஏரியில் தூர்வார வேண்டும். அதற்கு  முன்பாக விரைந்து ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் திருட்டை தடுக்க கோரி பொதுமக்கள்  மறியல்

செங்குன்றம், ஜூலை 1-  சோழவரம் அருகே யுள்ள அருமந்தை ஊராட்சி க்குட்பட்ட பகுதியில் கொக்குமேடு கிராமம் உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட தனியார்கள் கம்பெணிகள் ராட்சத ஆழ்துளைகுழாய் கிணறு அமைத்து தண்ணீர் திருடி டேங்கர் லாரி மூலம் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அருமந்தை பகுதியில் நிலத்தடி நீர் கிடைக்காமல் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு ள்ளது. எனவே, ராட்சத ஆழ்துளைகுழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் இது சம்மந்தமாக எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், திங்களன்று (ஜூலை 1) அருமந்தை சந்திப்பில்  பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மறியல் போராட்டம் காரண மாக அருமந்தை- செங்குன்றம், அருமந்தை-மணலி உள்ளிட்ட பகுதிக ளுக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. போக்கு வரத்து தடை ஏற்பட்டது. உடனே சோழவரம் காவல்துறையிரும், அதிகாரி களும் அங்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மக்கள் கருத்தாம்: கிரண்பேடி விளக்கம்

புதுச்சேரி,ஜூலை 1 சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோச மான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டியி ருந்தார். இந்தியாவின் பெரிய நகரமான சென்னை வறட்சி பாதித்த முதல் நகரமாக மாறியுள்ளது. மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகா ரம் போன்றவற்றால்தான் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டு ள்ளது என்றும் கிரண்பேடி விமரிசித்திருந்தார். மேலும், மக்களின் சுயநல எண்ணமும், மோசமான அணுகுமுறையும் கூட இந்தப் பிரச்னைக்குக் காரணம் என்று கூறியி ருந்தார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கடும் கண்டனம் தெரி வித்திருந்தார். இந்த நிலை யில், இந்த கருத்து தனது கருத்தல்ல என்றும், மக்க ளின் கருத்தையே தான் கூறியதாகவும் கிரண்பேடி  விளக்கம் அளித்துள்ளார்.

போலியாக தயாரிக்கப்பட்ட  கேனான் டோனர்கள் பறிமுதல்

சென்னை, ஜூலை 1- தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் போலியாக தயாரிக்கப்பட்ட கேனான் நிறுவனத்தின்  டோனர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. கோவையில் காந்திபுரம் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கடந்த 26 ஆம் தேதி 5 கடைகளில் சிபி-சிஐடி  காவல்துறையினரால் இந்த  சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த சி 31 கன்சல்டன்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் கோவை பிஎஸ் காவல்நிலையத்தில் அறிவுச் சொத்துரிமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

பாம்பு கடித்து மாணவி பலி

திருவள்ளூர், ஜூலை 1  திருவள்ளூரை அடுத்த தண்ணீர் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் ஸ்ருதி. திருவள்ளூரில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டுத் திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார் அப்போது விஷப் பாம்பு ஒன்று ஸ்ருதியை கடித்துச் சென்றுவிட்டது. இதில் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஸ்ருதியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

;