tamilnadu

img

பத்திரிகையாளர் அகால மரணம்...

சென்னை:
மதுரை மணி நாளிதழின் உரிமையாளர்களில் ஒருவரும் பத்திரிகையாளருமான எஸ்.பாலமுருகன்  சனிக்கிழமை அன்று  மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 52. சில ஆண்டுகள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல்  உயிரிழந்தார்.அவருக்கு உமா என்ற மனைவியும் ரேவதி, வெங்கட் என்ற  மகளும் மகனும் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தலைமைச் செயலகத்தில் மதுரை மணி நாளிதழின் செய்தியாளராக பணியாற்றி வந்தார். அவரது  இறுதி நிகழ்ச்சி மதுரையில் ஞாயிறன்று நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பாலமுருகன் மறைவுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன.