tamilnadu

மின் வாரியம் வடக்கு திட்டத்தில் வரலாறு காணாத லஞ்சம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சென்னை மின் வழங்கும் வட்டம் வடக்கு திட்டத்தில்  நிர்வாக சீர்கேடு தலைவிரித்து ஆடுகிறது ஊழியர்களுக்கு பதவி உயர்வு  வழங்கும்போது ஒதுக்கப்பட்ட பணியிடம் விரும்பாத பட்சத்தில் வடக்கு திட்ட  நிர்வாக அலுவலரை  கவனித்தால்  விரும்பிய இடம் கிடைப்பதாக ஊழியர்கள் பரவலாக பேசிக்கொள்கிறார்கள். பதவி உயர்வு வழங்கும் பட்டியலில் பெயர் இல்லை என்றால் கூட பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பதவி உயர்வு முதன்மை பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது என ஆதாரங்களோடு சுட்டி காண்பித்த பின்ன ரும் அவர்களுக்குபதவி உயர்வு வழங்காமல் அவர்களைவிட இளையவர்க ளுக்கு பதவிஉயர்வு வழங்கப்படுகிறது. இதுபோன்று மோசமான செயல் தாங்கள் அலுவலகத்தில் நடப்பதாக மேற்பார்வை பொறியாளரிடம் புகார் தெரிவித்தால் அவரோ, “இந்த அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. எனது கைகள் கட்டப்பட்டுள்ளது’’ என்று புலம்புகிறார். நிர்வாகத்தை யார் நடத்துவது என்று தெரியவில்லை. நிர்வாக அலுவலரை  சந்தித்தால் மேற்பார்வை பொறியாளர்  தான் அவர் விருப்பத்திற்கு உத்தரவு வழங்குகிறார் என்று கூறுகிறார்.  Reback  பாலிசி என்ற முறையில் எந்த வரன்முறையும் இல்லாமல் உத்தரவு வழங்கப்படுவதாக ஊழியர்கள் குமுறுகிறார்கள்.  பணம் கொடுத்தால் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஏழுமலை உத்தரவை தயார் செய்யும் நிலை உள்ளது  பொன்னேரிகோட்டத்தில் மூன்று மாதத்தில் ஒரு ஊழியருக்கு 2 முறை இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டது.  இவற்றுக்கு  மேலிடத்திலிருந்து அழுத்தம் உள்ளதாக கூறப்படுகிறது. நியாயமாக கிடைக்க  வேண்டியவர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் மறுக்கப்படும் போது அதை சுட்டிக் காண்பித்த பின்னும் சரி செய்யாதபோது ஊழியர்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக மின் ஊழியர் மத்திய அமைப்பு கூறியுள்ளது. வடக்கு திட்டத்தில் சில மாதங்களுக்கு முன் மின்துறை அமைச்சர் சிபாரிசு செய்ததாக  பொய்யான கையொப்பமிட்டு அவரது பெயரை தவறாக பயன்படுத்திய கும்பல் மீது  உறுதியான நடவடிக்கை எடுத்தி ருந்தால் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளிவைத்திருக்கமுடியும். ஆனால் நடவடிக்கை எடுக்காததன் விளைவு தற்போது தொடர்கிறது. லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு  துறையும் கண்டுகொள்ளாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஊழியர் மத்தியில் எழுப்புகிறது.  வடக்கு திட்ட உயர் அதிகாரிகளின் இந்த அராஜக நடவடிக்கைகளை கண்டித்து இயக்கம் நடத்த தமிழ் நாடுமின் ஊழியர் மத்திய அமைப்பு முடிவு செய்துள்ளது பணியில் சேரும்போது தவறான கல்விச் சான்றிதழ் சமர்ப்பித்த ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்க மேற்பார்வை பொறி யாளர் அலுவலகத்திற்கு கோப்புகள் வந்த நிலையில் விசாரணை என்ற பெயரில் சம்மந்தப்பட்ட நபர்களிடம்  பணத்தைப் பெற்றுக்கொண்டு அவற்றின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பிரச்சனையை கிடப்பில் போட்டுள்ளதாகவும் ஊழியர்கள் பேசிக்கொள்கிறார்கள். 

மறுப்பு

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நமது நிருபர் மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது வேறு ஒரு நபர் பேசினார்.  அவர்தன்னை கும்மிடிப்பூண்டி உதவிபொறியாளர் பன்னீர் செல்வம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.  “ஐயா  கால் டைவர்ட் செய்துள்ளதாகவும் செவ்வாயன்று பிற்பகல் 2மணிக்கு அவர் பொறுப்பேற்றவுடன் பேசுவார் என்றும் கூறினார். காழ்புனர்ச்சி காரணமாக இந்த குற்றச்சாட்டுகளை சிலர் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்தான் ரிபேக் பாலிசி பின்பற்றப்படுவதாகவும் நன்றாக வேலைசெய்யக்கூடிய தொழிலாளர்களை அவர்களது ஊரின் அருகே இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் கூறினார். இதர குற்றச்சாட்டுகள்   குறித்து  மேற்பார்வை பொறியாளர்   சந்திரசேகர் தான் பதிலளிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

;