சென்னையில் இருந்து மும்பைக்கு செல்போன் கொண்டு செல்லப்பட்ட லாரி கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பூந்தமல்லியில் இருந்து எம்ஐ செல்போன்களை ஏற்றிக்கொண்டு எம்எச் 4ஜெகே 8553 என்ற பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி மும்பைக்கு சென்று கொண்டிருந்தது. கண்டெய்னர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை அருகே சென்று கொண்டிருந்த போது 3 லாரிகளில் வந்த 10 அடையாளம் தெரியாத நபர்கள் லாரியை வழிமறித்து ஓட்டுநரை தாக்கினர். பின்னர் ஓட்டுநர்களை வனப்பகுதியில் கட்டிவைத்து விட்டு ரூ.10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் இருந்த லாரியை கடத்திச் சென்றுள்ளனர்.
இதையடுத்து ஓட்டுநர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் சூளகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.