சென்னை, நவ.27- ரயில்வேயில் நடைபெற உள்ள தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தலில் டிஆர்இயூ சங்கத்திற்கு ஆதரவான அலை வீசுகிறது. தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனி யன் (டிஆர்இயூ) பிரச்சார கூட்ட த்திற்கு தொழிலாளர்கள் வெள்ளமென திரண்டு வருவதை கண்டு ஏற்கெனவே அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் கதி கலங்கியுள்ளன. அங்கீகாரத் தேர்தல் வரும் டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் நடைபெற்ற நிலையில் தெற்கு ரயில்வே முழுவதும் பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
டிஆர்இயூ தலைமையில் அமைந்துள்ள கூட்டணி சார்பில் கடந்த மாதம் 23ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து டிஆர்இயூ-வின் சின்னமான நட்சத்திர சின்னத்திற்கு வாக்கு கேட்டு அனைத்து பணிமனைகளிலும், ஒர்க்சாப் பிரிவுகளிலும், ரயில் பரா மரிப்பு கூடங்களிலும், ரயில்வே அலு வலகங்களிலும் ஊழியர் குடியிருப்பு களிலும் தொடர்ந்து பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை பெரம்பூரில் உள்ள கேரேஜ் பணிமனையில் புதனன்று (நவ.27) மாபெரும் பிரச்சாரக்கூட்டம் நடை பெற்றது.
இதில் ஏற்கெனவே அங்கீ காரம் பெற்று காலம் காலமாக தொழி லாளர்களை ஏமாற்றிவரும் என்.கண்ணையா தலைமையிலான மஸ்தூர் யூனியன் மிரட்டலையும் மீறி, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் திரண்டனர். இந்த கூட்டத்தில் டிஆர்இயூ செயல் தலைவர் அ.ஜானகிராமன் பேசுகை யில், டிஆர்இயூ பிரச்சார கூட்டத்திற்கு முன்பு இங்கு மஸ்தூர் யூனியன் தலை வர் என். கண்ணையா பேசிவிட்டுச் சென்றுள்ளார். அதற்கு பின்னர் என்.எப்.ஐ.ஆர் சம்மேளனத்தின் சார்பில் சங் யூனியனை ஆதரித்து ஐஎன்டியுசி அகில இந்திய பொதுச்செயலாளர் இராகவையா பேசிச் சென்றுள்ளார்.
அவர்கள் திரும்ப திரும்ப பேசியது டிஆர்இயூ சங்கத்திற்கு அகில இந்திய அளவில் சம்மேளனம் அதாவது பெடரேஷன் இல்லை என்ப தாகும். பெடரேஷன் இல்லாத 2019 ஆம் ஆண்டு தொடுத்த வழக்கில் தான் அங்கீகாரத் தேர்தலை நடத்தா விடில் ரயில்வே வாரிய தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் என தில்லி உயர் நீதிமன்றம் எச்சரித்தது. இதன் பின்னரே அங்கீகார தேர்தலை நடத்திட ரயில்வே அமைச்சர் ஒப்புதல் கொடுத்தார். இந்த தேர்தலில் அகில இந்திய ரயில்வே ஊழியர் சம்மேள னம் (ஏஐஆர்எப்) இது எச்எம்எஸ் தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட் டது.
மற்றொரு சம்மேளனம் இந்திய தேசிய ரயில்வே ஊழியர் சம்மேளனம். இது ஐஎன்டியுசி தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்ட சம்மேளனமாகும். இந்த இரண்டு சம்மேளனங்களில் இணைந்துள்ள ரயில்வே தொழிற் சங்கங்கள் இந்த தேர்தலில் போட்டி யிடுகின்றன. இவர்கள் தான் டிஆர்இயூ சங்கத்திற்கு சம்மேளனம் இல்லை அவர்களுக்கு ஓட்டுபோடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த தேர்தல் சம்மேளனங்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அல்ல. அகில இந்திய அளவில் மண்ட லங்களில் செயல்படும் தொழிற் சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல் ஆகும்.
வாக்குச் சீட்டில் ஏஐ ஆர்எப் மற்றும் என்எப்ஐஆர் சம்மேள னங்கள் பெயரா உள்ளது? இல்லை! டிஆர்இயூ பெயர் தான் வாக்கு சீட்டில் முதலில் உள்ளது. அதன் பிறகு எஸ்ஆர்எம்யூ. எஸ்.ஆர்.இயூ, மற்றும் பாஜகவின் பிஎம்எஸ் சம்மேளனத்தில் இணைந்துள்ள தட்சிண ரயில்வே கார்மிக் சங் (டி.ஆர்.கே.எஸ்) ஆகிய சங்கங்களின் பெயர்களும் சின்னங்களும் அடுத்தடுத்து உள்ளன.
மண்டல அளவிலான ரயில்வேயில் குறிப்பாக தெற்கு ரயில்வேயில் தொழி லாளர்களின் குரலை பிரதிபலிப்பது யார்? தெற்கு ரயில்வே தொழிலாளர் நலன்களை பாதுகாப்பதற்காக நித்தம் நித்தம் போராடும் தொழிற்சங்கம் டிஆர்இயூதான் என்பதை தொழிலா ளர்கள் நன்கு அறிந்துள்ளனர். டிஆர்இயூ தான் ஒன்றிய பாஜக தலை மையிலான அரசாங்கத்தின் தொழி லாள விரோத கொள்கைகளை உறுதி யாக எதிர்க்கும் சக்திமிக்க அமைப்பு என உணர்ந்து ரயில்வே தொழிலா ளர்கள் அனைவரும் தவறாமல் நட்சத்திர சின்னத்தில் வாக்களியுங்கள்.
புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்த சங்கம்
டிஆர்இயூ தான் தைரியமாக ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஒரே யூனியன். இந்த வழக்கில் புதிய பென்சன் திட்டத்தில் சேர்ந்த தொழிலாளி உயி ரிழந்தால் குடும்ப பென்சனை பழைய பென்சன் அடிப்படையில் வழங்கிட தெற்கு ரயில்வேயில் இடைக்கால தீர்ப்பை பெற்ற ஒரே சங்கம் டிஆர்இயுதான். அதே போல் இன்வேலிடு பென்ஷனை பெற்று கொடுத்தசங்கமும் டிஆர்இயூ தான். இதற்கு நேர்மாறாக ஏஐஆர்எப் மற்றும் என்எப்ஐஆர் சம்மேளனங்கள் தங்களது சம்மேளனத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக கண்ணை மூடிக் கொண்டு புதிய பென்சன் திட்டத்தை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு கொண்டுவந்தபோது அதை வரவேற்று ஆதரித்தார்கள் என்பதை ரயில்வே ஊழியர்கள் மறந்து விடக்கூடாது.
மஸ்தூர் யூனியன் இணைந்துள்ள ஏஐஆர்எப் சம்மேளனத்தலைவர் உமுராமுல் புரோகித் புதிய பென்சன் திட்ட அறக்கட்டளை உறுப்பி னராக 2012 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார். 2024 யுபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு அறி வித்த போது பிரதமர் மோடி பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்து கொண்டார். ஆனால் புதிய பென்சன் திட்டத்தையும் ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை டிஆர்இயூ கடுமையாக எதிர்க்கிறது.
தொழிலாளர் சர்வீஸ் பணத்தை ஒய்வு பெறும் போது செட்டில் மென்டாக முழுவதும் தராமல் அரசே முழுவதும் எடுத்துக் கொள்ளும். 5மாத அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ மட்டும் மொத்த தொகை என தரும். அந்த தொகையும் தொழி லாளர்களுக்கு பிறகு அவர்களது குடும்பத்திற்கு தரப்படாது இதை ஆதரித்தவர்கள் ரயில்வே சம்மே ளனங்கள். எனவே ரயில்வே தொழி லாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் துரோகம் இழைக்கும் இதுபோன்ற சம்மேள னங்கள் தேவையா?
12 ஆண்டுகளாக ஒரே போனஸ் 78 நாட்கள்
ரயில்வேயின் பயணிகள் வரு மானம் சரக்கு போக்குவரத்து வருமானம் என அனைத்தும் இரட்டிப்பான பிறகும் அரசு 78 நாள் போனஸ் அறிவிக்கும் போது வாய்திறந்து 156 நாள் கொடு என கேட்க முடியாத நிலையில்தான் ரயில்வே சம்மேளனங்கள் உள்ளன.
ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம்
தெற்கு ரயில்வே முழுவதும் பிரச்சாரம் செய்துவிட்டு கடைசியாக தான் பெரம்பூர் கேரேஜ் ஒர்க்சாப் வந்துள்ளேன். தெற்கு ரயில்வே முழுவதும் டிஆர்இயூ அலை விசுகிறது. மாற்றம் தேவை என தொழிலாளர்கள் முடிவெடுத்துள்ளனர். மஸ்தூர் யூனியன் ஒரு ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுக்க துவங்கி விட்டனர். வாலாஜா ரோடு எஸ்எஸ்இபிவே வெங்கடேசன் பணம் கொடுத்துள்ளார்.
இதிலிருந்தே அவர்களின் பயம் தெரிகிறது. தொழிலாளர்களை மிரட்டுவது தொழிற்சங்க வேலையா? டிஆர்இயூ சுவரொட்டிகளை கிழிக்கின்றனர். நட்சத்திரம் சின்னத்தை அழிக்கின்றனர். தொழிலாளர் மனதில் நட்சத்திரம் உள்ளது. அராஜகம் ரவுடியிசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க டிஆர்இயூ வின் நட்சத்திர சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வீர்.
இவ்வாறு அவர் பேசினார். ஜானகிராமனின் தமிழ் மற்றும் ஆங்கில உரையை உதவி பொதுச்செயலாளர் பேபிஷகிலா இந்தியில் மொழியாக்கம் செய்தார்.