tamilnadu

img

டிஆர்இயூ மத்திய சங்க பொருளாளர் என்.தனபால் காலமானார்

அம்பத்தூர், டிச. 11- தட்சிண ரயில்வே எம்ளாயிஸ் யூனியன் (டிஆர்இயூ) மத்திய சங்க பொருளாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் வடசென்னை மாவட்டக் குழு உறுப்பி னரும், சிஐடியு வடசென்னை மாவட்ட முன்னாள் துணைச் செயலாளருமான என்.தனபால் (64) உடல்நலக் குறை வால் புதனன்று (டிச.11) காலை காலமானார். தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக டி.ஆர்.இ.யூ தொழிற்சங்கத் தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரயில்வே அரங்க இடைக்கமிட்டி செயலாளராகவும், வடசென்னை மாவட்டக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். மேலும் வட சென்னை மாவட்ட சிஐடியுவிலும் நிர்வாகியாக செயல் பட்டார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகியாகவும் செயல்பட்டார். தான் வசிக்கும் பகுதியிலும் வாலிபர் சங்க, கட்சிப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். உடல்நிலை குன்றிய போதும் கூட தனது பொருளாளர் பொறுப்பை திறம்பட நிர்வகித்தார். பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும் கூட சங்கப் பணிகளை மேற்கொண் டார். தன்னுடைய இறுதி மூச்சு வரை கட்சிக்காவும், தொழிற்சங்கத்திற்காகவும் பாடுபட்டார். அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன்,  டிஆர்இயூ செயல் தலைவர் ஏ.ஜானகிராமன், பொதுச் செயலாளர் பி.மாத்யூ சிரியக், துணைத் தலைவர் ஆர்.இளங்கோவன், உதவி துணை பொதுச் செயலாளர்கள் பேபி ஷகிலா, அரிலால், சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமகிருஷ்ணன், பி.சந்திரசேகர் நாயார், ஆர்.ஜெயராமன், டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், இரா.முரளி, ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் எஸ்.ராமலிங்கம், பொதுச் செயலாளர் ப.ராஜாராம், பொருளாளர் சுரேஷ், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், ஆட்டே சங்கத்தின் மாவட்டத்தலைவர் மனோகரன்,பொதுச் செயலாளர் ஜெயகோபால்,  வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர் கார்த்தீஷ்குமார், மாவட்டச் செயலாளர் சரவணதமிழன் உள்ளிட்ட ஏராள மான தொழிற்சங்க நிர்வாகிகளும், நண்பர்களும், உற வினர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர். பின்னர் புதன்கிழமை மாலை அண்ணனூர் கோணாம்பேடு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அம்பத்தூர் டன்லப் அருகே உள்ள சுடுகாட்டில் எரி யூட்டப்பட்டது. மறைந்த தனபாலுக்கு அனுசியா என்ற மனைவியும், ரமணி என்ற மகளும், பாலாஜி என்ற மகனும் உள்ளனர்.  இதில் ரமணி வடசென்னை மாவட்ட சிஐடியுவில் நிர்வாகியாக செயல்படுகிறார். மகன் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் ஆவடி பகுதி பொரு ளாளராக செயல்பட்டவர்.