tamilnadu

img

ஆன்லைன் வகுப்புகளால் கண்களுக்கு பாதிப்பா? பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை:
ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்களில்பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து எழும்பூர் கண் மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள் ளன. இதனிடையே தமிழ்நாட்டில் சில தினங்களாக தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்திவருகின்றன.இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளால், குழந்தைகளின் கண்களில் பதிப்பு ஏற்படுகிறது என்று சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த விமல் மோகன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், “குழந்தைகள் தொடர்ந்து மடிக்கணினி, செல்போன் பயன்படுத்துவதால் கண்பார்வை பாதிப்பு ஏற் படுகிறது. அதிக நேரம் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.அதேபோல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த முழுமையாகத் தடைவிதிக்க வேண்டும். மேலும் செல்போன்களைப் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண் மருத்துவ வல்லுநர் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட வேண்டும்” என்று குறிப் பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப் பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஆன்லைன் வகுப்புகள் தொடர் பாக மத்திய அரசு வகுத்த வரைவு விதிமுறைகளைத் தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, பள்ளிகளால் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்புகள் என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல்செய்ய எழும்பூர் கண் மருத்துவமனை முதல்வருக்கு (டீன்) உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;