tamilnadu

img

நோய்த்தொற்றைத் தடுக்க அரசு என்னசெய்யவேண்டும்?

சென்னை:
சென்னையிலும் சில மாவட்டங்களிலும் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்க தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவரும் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மையத்தின் முன்னாள் இயக்குநருமான டாக்டர் ரெக்ஸ் சற்குணம் சில யோசனைகளைத் தெரிவித்துள்ளார்.

அவை வருமாறு: 
தமிழகத்தில் கொரோனா என்பது  சமூக சுகாதார அவசர நிலையாக அறிவிக்கவேண்டும்.  தமிழகத்தில் இந்த நோய்த்தொற்றைக்  கட்டுப்படுத்த சமூக நலத்துறை மூலமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்தத் துறையின் மூலமாக ஆசிரியர்கள், பொது வினியோகத் துறை ஊழியர்கள், காவலர்கள் மற்றும் இதர துறையின் உதவியைப் பெற்று இப்பணிகளை மேற்கொள்ளலாம். பொதுமக்களிடமிருந்து தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களையும் இதில் ஈடுபடுத்தலாம்.  நோய்த்தடுப்பு பணிகளின்போது தன்னார்வலர்களும் அரசு ஊழியர்களும் ஆறடி இடைவெளியுடன்  பணிகளை மேற்கொள்ளவேண்டும்.  மேலும் பணியில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். காவல்துறையினர் இப்பணியில் ஈடுபடும்போது லத்திகளைப் பயன்படுத்தக்கூடாது, ஊடகத்தின் மூலமாக இந்நோய்த்தொற்று குறித்த தீவிரமான விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும். இதற்காக பொதுச் சுகாதாரத் துறையில் ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் தற்போதுள்ள நிபுணர்களின் ஆலோசனையைப்  பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் அனைத்துப்பகுதி மக்களுக்கும் அரசு சார்பில் இலவசமாக முகக்கவசம் வழங்கப்படுவதோடு இந்நோய்த் தொற்று குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகளை  விநியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;