tamilnadu

img

‘படைப்புழு தாக்குதலை முற்றாக ஒழிக்க அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும்’

சென்னை:
படைப்புழு தாக்குதலை முற்றிலும் அழித்தொழிக்கும் வகையில் மாநிலம்முழுவதும் ஒருங்கிணைந்த முறையில் மாநில அரசேஏக காலத்தில் மருந்தடிக்கும் நடவடிக்கை யைமேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் பதினைந்திற்கு மேற்பட்டமாவட்டங்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மக்காச்சோளத் தில் அமெரிக்க படைப்புழு தாக்கி பெரும்இழப்புக்கு விவசாயிகள் ஆளாயினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இழப்பீடுகோரி போராட்டம் நடத்தியதுடன் அமைச்சரை நேரில் சந்தித்து வற்புறுத்தி யதையொட்டி சுமார் 186 கோடி ரூபாய் தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியது. இன்னும் பல விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என்ற குறைபாடு இருக்கிறது.இருப்பினும், இந்த ஆண்டும் பலலட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப் பட்டுள்ளது. பயிர் வளர்ந்து வரும் நிலை யிலேயே அமெரிக்க படைப்புழு தாக்கி பயிர்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்து தனித்தனியாக பூச்சி மருந்துகளை அடித்தாலும் அதை ஒழிக்க முடியவில்லை. இதனால் மக்காச்சோள உற்பத்தியில் இந்த ஆண்டு பெரும் சரிவுஏற்படும் நிலை உருவாகியுள்ளது. விவசாயிகள் மீண்டும் நட்டத்தை சந்திக்க நேரிடும்.எனவே, படைப்புழு தாக்குதலை முற்றிலும் அழித்தொழிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த முறையில் மாநில அரசே ஏக காலத்தில் மருந்தடிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

;