tamilnadu

img

பள்ளிகள் திறந்த பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வு

சென்னை:
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்த பின்னரே டிஎன் பிஎஸ்சி தேர்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடைபெறும் தேர்வுகள் குறித்த கால அட்டவணையை வெளியிடும். அந்தக் கால அட்டவணையில், தேர்வுகள் நடத் தப்படும் தேதி, கலந்தாய்வு நடைபெறும் தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.2020 ஜனவரியில் தேர்வர்களுக்கான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு பணிகளை தொடங்கியுள்ளது. ஆனால், மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், கொரோனா தொற்று பாதிப்பால் திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற் பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்வுகள் நடைபெறுவது குறித்து, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலர் கூறியதாவது:-தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு ஆசிரியர்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றனர். மேலும் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது தெரியவில்லை.பள்ளிகள் திறந்து வழக்கமாக செயல்பட ஆரம்பித்த பின்னர், தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப் படும். தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் கழித்த பின்னரே தேர்வு நடத்தப்படும்.கடந்த ஆண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டன. இந்தாண்டு கொரோனா தாக் கத்தால் மீதமுள்ள நாட்களில் 4000 முதல் 5000 பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;