tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

 மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்: வழக்கு முடித்துவைப்பு

சென்னை,நவ.27-  பெண் செய்தியாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக பதி விட்டது தொடர்பாக நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியுள்ளார். இதையடுத்து அவர் மீதான வழக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு முடித்து வைக்கப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்  பத்திரிகையாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இந்தப் பதிவை எஸ்.வி.சேகர் தமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  கோபால்சாமி என்பவர் நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு பின்னர் சென்னை யில் உள்ள நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்வதாக கோபால்சாமி கூறியதை அடுத்து, எஸ்.வி.சேகர் மீதான வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

நிமோனியா காய்ச்சல்: அரசு ஆலோசனை

சென்னை,நவ.27- சீனாவில் புதிய வகை நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் திங்களன்று (நவ.27) ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில்  சுகாதாரத்துறை முதன்மை செய லாளர் ககன்தீப் சிங் பேடி, பொது  சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், தொற்று நோய் தடுப்பு அதி காரிகள் பங்கேற்றுள்ளனர். 

காணொலி காட்சி வாயிலாக நடை பெற்ற ஆலோசனையில், தொற்று நோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் கையிருப்பு, முகக் கவசம், அவசர கால மருந்துகள் கையி ருப்பு வைப்பது தொடர்பாகவும் ஆலோ சிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து நிமோனியா நோய் தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியா கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டோம்: இன்று குஷ்பு வீடு முற்றுகை

சென்னை,நவ.27- பாஜக தேசிய செயற்குழு உறுப்பி னரான நடிகை குஷ்பூ, சேரி மொழி என்ற வார்த்தையை பயன்படுத்தி யதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக் கப்பட்டது. மேலும், அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் குஷ்பூ, தான் தவறாக எதுவும் பேசவில்லை சேரி என்பது தவ றான வார்த்தை அல்ல என்று விளக்க மளித்தார். இந்த நிலையில், நவ.28  அன்று குஷ்பூ வீட்டை முற்றுகையிடு வது என்று காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் ரஞ்சன்குமார் தெரி வித்திருக்கிறார். 

வாக்காளர் பட்டியலில் 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை,நவ.27- தமிழ்நாட்டில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டி யல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 16 சட்ட மன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 68  யிரத்து 178 வாக்காளர்கள் உள்ளனர். 

    மேலும் வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ள வர்கள் மற்றும் 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் படிவம் 6ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெயர்கள் நீக்கம் தொடர் பாக படிவம் 7ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். 

சட்டமன்ற தொகுதிக்குள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்கள் வேறு தொகுதிக்கு குடி பெயர்ந்தவர்கள் படிவம் 8ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

இதற்கான சிறப்பு முகாம் 4 நாட்கள் நடத்தப்பட்டது. சனி, ஞாயிற் றுக்கிழமைகளில் சென்னையில் உள்ள 3 ஆயிரம் வாக்குச்சாவடி மைய ங்களில் நடத்தப்பட்டது. முதல் கட்ட மாக 4 மற்றும் 5 ஆம் தேதி நடந்தது. இரண்டாவது கட்டமாக நவ.25,26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.