tamilnadu

img

ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து நீக்கம்

சென்னை
சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ-வாக இருப்பவர் கு.க செல்வம். இவர் சில நாட்களுக்கு முன்பு பாஜக தேசிய தலைவரான ஜெ.பி. நட்டாவை தில்லியில் சந்தித்தார். இதுதொடர்பாக திமுக தலைமை கு.க. செல்வத்திடம் விளக்கம் கேட்டு இடைநீக்கம் செய்தது. மேலும் உங்களை ஏன் நீக்கக் கூடாது என்ற அடிப்படையில் நோட்டிசும் அனுப்பியது. 

இந்நிலையில், தில்லியில் பாஜக தலைவர்களை சந்த்தித்தது தொடர்பாக கு.க செல்வத்தின் விளக்கம் ஏற்கக்கூடியதாக இல்லை எனவும், அவரை கட்சியில் இருந்து  நிரந்தரமாக நீக்குவதாகவும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

;