கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலை, ஜுன் 11- திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா சதகுப்பம் கிரா மத்தைச் சேர்ந்த ஏழுமலை (45), சண்முகம் (42) இரு வரும் கள்ளசாராயம் விற்றது தொடர்பாக பலமுறை வழக்கு பதிவு செய்தும், தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த னர். அவர்களை வானாபுரம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த னர். மேற்கண்ட நபர்களின் சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி பரிந்துரை செய்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இரு வரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 47பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போலி கைரேகை மூலம் நிலம் மோசடி: 3 பேர் கைது
கடலூர், ஜூன் 11- போலி கைரேகை மூலமாக 3.35 லட்ச ரூபாய் மதிப்பிலான நிலம் மோசடி செய்த தாக 3 பேரை கடலூர் காவல் துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரா.செங்குட்டுவன். இவர் அண்மை யில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ்வை சந்தித்து மனு அளித்தார். அதில் தனது உறவினரின் நிலத்தை 3 பேர் சேர்ந்து ஏமாற்றி விட்டதாக மனுவில் கூறி யிருந்தார். இதுதொடர்பாக நிலஅபகரிப்பு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் செங்குட்டுவனின் அத்தை சகுந்தலா - அண்ணாமலை தம்பதி யினருக்கு குழந்தை இல்லையாம். அண்ணா மலை பெயரில் அருகிலுள்ள காராமணிக் குப்பத்தில் 72 சென்ட் நிலம் உள்ளது. இவர்க ளுக்கு குழந்தை இல்லாததைத் தெரிந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த சு.வேலா யுதம் (76) என்பவர் அந்த நிலத்தை தனது நிலம் எனக் கூறியுள்ளார். பின்னர் போலியாக ஆவணங்களை தயா ரித்து தனது புகைப்படத்தை ஒட்டியும், போலி யாக கைரேகை பதிவு செய்தும் தனது மகன் சிவகுமார் (47) உடன் சேர்ந்து கொண்டு அதனை பில்லாலியைச் சேர்ந்த ல.சீனி வாசன் (63) என்பவருக்கு விற்பனை செய்துள் ளது தெரிய வந்தது. இதையடுத்து வேலா யுதம் உள்ளிட்ட 3 பேரையும் காவல் துறையி னர் கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். அந்த நிலத்தின் மதிப்பு 3.35 லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னை, ஜூன் 11 - சென்னையில் 5வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்த்தப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுக்கும் வகை யில் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. இதனால் வாக னங்கள் ஓடவில்லை. பெட்ரோல் டீசல் விற்பனை கனிசமாக குறைந்தது. எனவே, தினந்தோறும் விலையை நிர்ணயிக்க வில்லை. தற்போது பொது முடக்கம் அமலில் இருந்தா லும் பெரும்பாலான கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டதால் வாகனங்கள் அதிக அளவில் ஒடுகின்றன. இந்நிலையில் சென்னையில் தொடந்து 5வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த் தப்பட்டுள்ளது. சென்னையில் வியாழ னன்று (ஜூன் 11) பெட்ரோல் விலை 53 காசுகள் உயர்ந்து லிட்டர் 77.96 ரூபாய்க்கும், டீசல் 51 காசுகள் உயர்ந்து 70.64 ரூபாய்க்கும் விற்ப னையானது. இதன்படி, கடந்த 5 நாட்க ளில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 62 பைசா வும், டீசல் 2 ரூபாய் 68 பைசா வும் விலை உயர்ந்து உள்ளது.
கடலூரில் ரூ. 20 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்
கடலூர், ஜூன் 11- கடலூரில் ரூ.20 லட்சத்தில் அமைக்கப் பட்ட கண்காணிப்பு கேமராக்களை காவல் துறை கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார். குற்றச்செயல்களை கண்காணிக்கவும், துப்பு துலக்குவதற்கும் கண்காணிப்பு கேம ராக்கள் காவல் துறையினருக்கு பெரிதும் உதவி வருகிறது. அந்த வகையில் காவல் துறையினரால் வீடுகள், வணிக நிறுவனங்க ளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்து வதற்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. அதேப்போன்று முக்கிய சாலைகள், தெருக்கள், சந்திப்பு பகுதிகளிலும் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்திட பல்வேறு அமைப்புகளிடம் காவல் துறையினர் உத வியை நாடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மக்களவை, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றில் பெரும்பா லான கேமராக்கள் இயங்காத நிலையில், தற்போதைய காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் ஏற்பாட்டின் பேரில் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக உபயதாரர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். பல்வேறு அமைப்பினர் உதவியுடன் கடலூர் திருப்பாதிரிபுலியூர் பேருந்து நிலையம், முதுநகர் பகுதிகளில் 72 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இயக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், ஏற்கனவே பொருத்தப்பட்ட கண்கா ணிப்பு கேமராக்கள் குறித்த நிலவரம் சேக ரிக்கப்பட்டு வருகிறது. அதில் இயங்கா தவை குறித்து தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். தற்போது ரூ.20 லட்சத்தில் 72 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பழுது பார்த்தல், இணையதள பயன்பாடு, கட்டுப் பாட்டு அறையுடன் இணைத்தல் ஆகிய ஓராண்டிற்கு செயல்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பராமரித்தால் மட்டுமே கண்காணிப்பு கேம ராக்களின் முழு பலனையும் அடைய முடி யும் என்றார். இதில் துணை கண்காணிப்பாளர் க.சாந்தி, ஆய்வாளர்கள் ம.பால்சுதர், கி.உதயகுமார், உதவி ஆய்வாளர்கள் ஆகாஷ், ராமச்சந்தி ரன், வணிகர் சங்க நிர்வாகி ஜி.ஆர்.துரைராஜ், சிப்காட் நிர்வாகி தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.