tamilnadu

காட்பாடியில் ஐம்பொன் சிலை திருட்டு

வேலூர், நவ.15- வேலூர் மாவட்டம் காட்பாடியிலிருந்து வள்ளிமலை செல்லும் சாலையில்  வி.டி.கே நகர் உள்ளது. இப்பகுதியில் உள்ள 30 வருட பழமையான மாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 லட்சம் மதிப்பிலான 3 அடி உயரம், 108 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை கோவில் கதவு உடைக்கப்பட்டு அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.  கோயிலை திறந்து பார்த்தபோது சிலை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் காட்பாடி காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.  சிலை கடத்தல் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரணை மேற்கொள்ள உள்ளார்.