tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களின் பிரச்சார பயணத்தில் கலந்து கொண்டேன். அனைத்து தொகுதிகளிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கம்மம் மாவட்டம் பாலேரு தொகுதியில் போட்டியிடும் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், தெலுங்கானா மாநில செயலாளருமான தோழர் தம்மினேனி வீரபத்ரத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் மக்கள் திரள் நம்பிக்கையை ஏற்படுத்தியது. புவனகிரி மாவட்டத்தில் மூன்று தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. எங்கெங்கும் செம்மயமாக காட்சியளிக்கிறது. மிரியாலாகுடா தொகுதியில் மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்த தோழர் ஜுலகண்டி ரங்காரெட்டி மீண்டும் களத்தில் நிற்கிறார். அனைத்து மையங்களிலும் மக்களின் வரவேற்பும் தோழர்களின் உற்சாகமும் நம்பிக்கை அளிக்கிறது.