tamilnadu

‘விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளது’

சென்னை, பிப். 26 - காங்கிரசிலிருந்து பாஜக-வுக்குத் தாவிய விஜயதாரணி, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவ ரின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப் பட்டதாக சபாநாயகர் அப்பாவு-வும் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, விஜயதாரணி எம்எல்ஏ-வாக இருந்த விளவங்கோடு தொகுதி காலியான தாக அறிவித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பி யுள்ளார். இதனால், வரும் மக்க ளவைத் தேர்தலுடன், விளவங்கோடு சட்டப்பேரவைக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.