விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மணக்குப்பத் தில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் சுற்றுச்சுவர் இல்லாத தால் இரவில் சமூக விரோதிகள் மது அருந்துவதும், தவறான செயல்களில் ஈடுபடுவதும் நடந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கல்லுரிக்கு சுற்றுச்சுவர் அமைத்து, சாலை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.