tamilnadu

img

தில்லியில் செல்போன் செயலி மூலம் சமூக விரோதிகள் தாக்குதல்

புதுதில்லி:
தில்லியில் வன்முறை வெறியாட்டத்தில், குறிப்பிட்ட மதத்தினரின் வாகனங்களைக் கண்டறிய, செல்போன் செயலியை சமூக விரோதிகள் பயன்படுத்தியிருப்பதாக  தகவல் தெரிய வந்துள்ளது.

தில்லியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில், குறிப்பிட்ட மதத்தினரின் வாகனங்கள் மட்டும் தீக்கிரையாக்கப்பட்டன. இதற்கு, செல்போன் செயலி மூலம், ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொடுத்தால், அதில் வாகனத்தின் உரிமையாளரின் விவரங்களைத் தெரிவிக்கும் செல்போன் செயலி மூலம் சமூக விரோதிகள்,ஒரு வாகனம் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுடையது என்பதை கண்டறிந்து, அதனை தீக்கிரையாக்கியும், அடித்து நொறுக்கியும் சேதப்படுத்தியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.இதுபோன்ற ஒரு சில செல்போன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரிலும் இலவசமாகக் கிடைக்கிறது. அந்த செயலிகளில்,  ஒரு வாகனத்தின் பதிவு எண்ணை போட்டால் போதும், அந்த வாகன உரிமையாளரின் அனைத்து விவரங்களும் உடனுக்குடன் தெரிய வரும்.

தகவல்களை தனியாருக்கு கொடுக்கும் அரசு
வாஹன் டேட்டா (வாகனங்களின் தகவல்) என்ற பெயரில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும் தகவல்கள், தனியாருக்கும் பரிமாறப்படுகிறது. லாப நோக்கத்துடன் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறைதனியாருடன் பகிர்ந்து கொள்ளும் இதுபோன்ற தகவல்கள், தவறான முறையில்மற்றும் வணிக ரீதியில் பயன்படுத்தப் படுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.