tamilnadu

img

அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை - வைரமுத்து

அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை என்று கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய வாக்கிங் வித் காம்ரேட்ஸ் புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவுத்துறையில்  அரசியல் சூழ்வது அறமில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் அருந்ததிராய் படைப்பு நீக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன். அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை. சாளரத்தை மூடிவிட்டால் காற்றின் வீச்சு நிற்பதில்லை  என்று தெரிவித்துள்ளார்.