tamilnadu

img

சேத்துபட்டில் கேள்விக்குறியாகும் அடிப்படைவசதிகள் போராட்டத்திற்கு தயாராகும் 107 ஆவது வட்ட மக்கள்

சென்னை எழும்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட சேத்துபட்டு 107 ஆவது வார்டில்  குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார சீர்கேடு, கழிவு நீர் தேக்கம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனை களில் சிக்கி அப்பகுதி மக்கள்  அவதிப்படுகின்றனர்.  சாக்கடையாகும் மழைநீர் கருக்காத்தமன் கோவில் தெரு, முருகேசன் தெரு, மனோகரன் தெரு, செல்வ நாதன் தெரு, மெக்நிக்ல்ஸ் சாலை  உள்ளிட்ட சில தெருக்கள் தாழ்வான பகுதியாக இருப்ப தால் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி சாக்கடை நீராக மாறிவிடுகிறது. பெரும்பாலான இடங்களில்  மழைநீர் வழிகால்வாய் உடைக்கப்பட்டு முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதில் வெளியேறும் சாக்கடைநீரால்  நோய்தொற்று ஏற்படுவதாக புகார் எழுந்து ள்ளது.  கால்வாயை சீர் செய்யக்கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இது வரை நட வடிக்கை எடுக்கவில்லை. எதிர்கட்சியினரின் சட்டமன்ற தொகுதி என்பதால் இப்பகுதி புறக்கணிக்கப்படுவதாக பொது நல ஆர்வலர்கள் கே.சேகர், வெங்கடேசன் ஆகியோர் தெரிவித்தனர். குடிமனை பட்டா ஆட்சியாளர்களும் அதிகாரி களும் எங்களை கண்டுகொள்வ தில்லை என்று கருக்காத்தமன் கோயில் அடிமனை வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.நடராஜன், பொதுச்செயலாளர் லோக நாதன் ஆகியோர் கவலை யுடன் தெரிவித்தனர். சென்னை யில் பிரசித்தி பெற்ற  முருகேசன் தெரு, மெக்நிக்ல்ஸ்சாலையில் உள்ள வீடுகளுக்கு நீண்டகால மாக பட்டா இல்லாமல் உள்ளது. இந்த நிலத்தை மேம்படுத்தி பல தலைமுறைகளாக வசித்து வருகி றோம். ஆனால் பட்டா  இல்லை என்பது பெருங்கவலையாக இருக்கிறது. எங்கள் குடி யிருப்பு நிலங்களை அற நிலைத்துறையின் உட்பிரிவு 34-இன் படி நியாயமான விலையை தீர்மானித்து அந்த தொகை யிணை தவணைமுறையில் பெற்றுக்கொண்டு அரசு எங்களுக்கே கிரயம் செய்துதர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.   இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை மனு அளித்துள்ளோம்.  ஏழை மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தில் 30.8.2019-ல் தமிழக அரசுவெளியிட்டுள்ள அரசாணை 318 உட்பிரிவு 5 இல் கோவில்நிலங்களில் நீண்ட காலமாக குடியிருப்போருக்கு வழங்க உத்தரவிட்டநிலையில் இதுவரை நடைமுறைப் படுத்தாமல் இருக்கிறது. ஆகவே அரசு இங்குள்ள 65 குடும்பங்க ளுக்கு உடனே பட்டாவழங்கி எங்கள்  நலனில் அக்கரை கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 107 ஆவது வட்டத்தில் குடி யிருக்கும் ஸ்ரீகாந்த், எம்.ஆர். மதிவாணன் ஆகியோர் கூறுகை யில்,சென்னையின் மையத்தில் இருந்துகொண்டு போக்குவரத்து வசதி தேவை என்கிற கோரிக்கை வைக்கும் போது எங்கள் நிலை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.சேத்துபட்டிலிருந்து பாரிமுனை, கோயம்பேடு, ஜிஎச் மருத்துவமனை, உயர்நீதி மன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கான பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஏற்கனவே தியாகராயர்நகர் முதல் பாரிமுனை செல்ல தடம் எண்.9ம் வடபழனி முதல் பாரிமுனை செல்ல தடம் எண்17 ஆகிய பேரூந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அவை நிறுத்தப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள், வேலைக்குச்செல்வோர், மாண வர்கள் மிகுந்த சிர மத்திற்குள்ளாகி வருகின்றனர். நிறுத்தப்பட்ட பேரூந்துகளை மீண்டும்  இயக்க என கோரிக்கை விடுத்தனர்.  107 ஆவது வட்டத்தில் ரேசன் கடை இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இப்பகுதி யில் ரேசன்கார்டு வைத்திருக்கும் 617 குடும்பத்தினர் ரேசன்கடை க்கு பொருட்களை வாங்க சுமார் 3 கிமீ வரை  நடக்க வேண்டி யுள்ளது. ஆட்டோவில் சென்று பொருட்களை வாங்குவதற்கு எங்களிடம் வசதியில்லை, இப்பகுதியில் இருந்த நியாய விலைக்கடையை (எண்.எம்சி ஓ11) பொது விநியோகத்துறை அதிகாரிகள் அவர்களின் நிர்வாக வசதிக்காக  பச்சையப்பன் கல்லூரி அருகில் இடமாற்றம் செய்துவிட்டனர் என்று குடு ம்பத்தலைவி சாமுண்டீஸ்வரி கூறினார்.  சென்னையின் மையப்பகுதி யில் வாழும் எங்களுக்கே இந்நிலை என்றால் கிராமத்து மக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.கொசுத்தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வரு கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இப்பிரச்சனையை வார்த்தையில் சொல்லி மாளாது என மற்றொரு குடும்பத்தலைவியான சுமதி கூறினார். எங்கள் வருமானத்தில் பெரும்பகுதி கொசுவர்த்தியும், வாட்டர்கேனும் வாங்குவதி லேயே சரியாக போகிறது. கடந்த சில மாதங்களாக  மருத்து வத்திற்காக செலவு அதிகரித்து விட்டது என மல்லிகா என்ற மற்றொரு பெண் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழும்பூர் பகுதி சேத்து பட்டு கிளைச் செயலாளர் கே.அன்பு கூறுகையில் சேத்து ப்பட்டு 107 ஆவது வட்டத்தில் பொதுசுகாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. சென்னையில் பல இடங்களில் டெங்கு உள்ளிட்ட மர்மகாய்ச்ச லால் நாளுக்கு நாள் அதிகரித்து மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சேத்துப்பட்டை சுற்றியுள்ள மக்கள் அடிப்படைவசதிகள் இல்லா மல் தவிக்கின்றனர். பாது காக்கப்பட்ட குடிநீர் என்பது கனவாகிவிட்டது.  மழைக்கால ங்களில் குடிநீர் கருப்பாகவும் துர்நாற்றத்துடனும் வருகிறது என்றார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குடிநீர் குழாய் பராமரிப்பின்றி இருப்ப தால் பழுதான குழாய்களில் சாக்கடைநீர் கலந்து வருகிறது. இதனால் ஜெகநாதபுரம், மங்களபுரம், பிருந்தாவனம், கோயிலைச்சுற்றியுள்ள பகுதிக ளில் மக்கள் வாந்தி பேதி, சரும நோய் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு ஆளாகிவரு கின்றனர். சுகாதாரத்துறை எங்கள் பகுதியில் உடனே மருத்துவமுகாம் நடத்த வேண்டும்.பாதாளசாக்கடை மேல்மூடிகள் (மேன்ஹோல்) அனைத்தும் பழுதடைந்து சிதைந்தநிலையில் உள்ளன. இதனால் இரவுநேரங்களில் இப்பகுதியில் பயணிப்பது சவாலான காரியமாக உள்ளது. மக்கள் சொல்லொண்ணா பிரச்சனைக்கு ஆளாகிவரு கின்றனர். பொதுமக்களின் குறைகளை அதிகாரிகளிடம்  கூறினால் அவர்கள் செவிசாய்க மறுக்கின்றனர். இந்நிலை நீடித்தால் இப்பகுதி மக்களை திரட்டி போராடுவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார். பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணாமல் அரசு அதிகாரி கள் தற்காலிகமாக சில மேம்போக்கான நடவடிக்கை யோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக எண்ணுகின்றனர். எங்களை போராட்டத்திற்கு தூண்டுவது அரசு நிர்வாகத்தின் அலட்சியம் தான் இன்னும் சிலநாட்களின் மெட்ரோ மற்றும் மாநகராட்சி நிர்வாக த்தின் மெத்தனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளதாக , பொறுப்பாளர் பிகே.மூர்த்தி  கூறினார். - ம.மீ.ஜாபர் 

;