tamilnadu

img

ஓய்வூதியத்தில் மாற்றம் கோரி உண்ணாநிலை போராட்டம்

சென்னை,பிப்.12 பிஎஸ்என்எல் ஓய்வூதியர்க ளுக்கு 1.1.2017 முதல் பென்சன் மாற்றம் செய்ய கோரி அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு மற்றும் சென்னை தொலைபேசி மாநிலச் சங்கங்கள் சார்பில் புதனன்று (பிப்12) மந்த வெளி, ஆர்.கே. நகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் உண்ணா நிலைப் போராட்டம் நடைபெற்றது. 1.10.2000-த்தில் டி.ஓ.டி அரசுத் துறையிலிருந்து பிஎஸ்என்எல் பொதுத்துறையில் இணைக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஐடிஏ ஊதிய அடிப்படையில் பென்சன் வழங்கும் பொறுப்பையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள் ளது. எனவே 1.10.2000-ல் அரசு அளித்த உடன்பாட்டின் படி ஊதிய மாற்றத்துடன் இணைக்காமல், 1.1.2017 முதல் 15 விழுக்காடு ஐ.டி.ஏ அடிப்படையில் பென்சன் மாற்றத்தை ஓய்வூதியர்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும் என இந்தப் போராட்டத் தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் பென்சன் மாற்றம் கோரி பல்லாயிரக்கணக்கான பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் கையெப்பம் இட்ட மனுவை இந்திய பிரதமருக்கு கடந்த மாதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில்  நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என மாநிலச் செயலாளர் என்.குப்புசாமி (தமிழ்நாடு தொலை பேசி), மாநிலச் செயலாளர் வி.குப்பன் (சென்னை தொலைபேசி) ஆகியோர் தெரிவித்தனர். இந்த போராட்டத்திற்கு சி.கே.நர சிம்மன், கே.ஆறுமுகம்  ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். ஏஐபி ஆர்பிஏ பொதுச் செயலாளர் கே.ராக வேந்திரன் துவக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் எஸ்.மோகன், கே.பங்கஜவள்ளி, பிஎஸ்என்எல்இயூ பொதுப்பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா , மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச் செயலாளர் கே.ஜெகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஏ.பாபு ராதாகிருஷ்ணன், எம்.கன்னியப்பன், சி.வினோத்குமார், டி.காசி, பி.மாணிக்கமூர்த்தி, கே.கோவிந்தராஜ், இ.மணிபாலன், உழைக்கும்பெண்கள் ஒருங் கிணைப்புக்குழு நிர்வாகிகள் புனிதா உதயகுமார் , வி.பி.இந்திரா, பெர்லின்ஆலிஸ்மேரி, எஸ்.ஹேமாவதி ஆகியோர் பங் கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிறைவாக எம்.செல்வராஜ் நன்றி கூறினார்.