பாதிக்கப்படும் நாடுகளை மட்டும் சமாதானப்படுத்துவதா?
ஐ.நா.சபையின் அமைதி நடவடிக்கைகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் ஜீன்-பியர் லாக்ரோயிஸ் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்கா-இஸ்ரேல் மத்திய கிழக்கில் போரை விரிவுபடுத்தும் வகையில் பதற்றத்தை தூண்டியுள்ளன. இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வராமல், பாதிக்கப்படும் நாடுகளையே சமாதானப்படுத்தும் அணுகுமுறையை சர்வதேச அமைப்புகள் மேற்கொள்கின்றன என பாலஸ்தீன ஆதரவாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம் திடீர் ரத்து
2024-ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியிலோ, மே மாத தொடக்கத்திலோ நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடை பெற உள்ளதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அறிவிப்பின்படி திங்களன்று (ஜனவரி 8) நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அடுத்து நடைபெறவுள்ள கூட்டத்திற்கான தேதி பின்னர் அறி விக்கப்படும் என தமிழ்நாடு தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.