tamilnadu

img

பதினேழாம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு

தூத்துக்குடி, அக்.8- தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை பரும்பு மற்றும் குளக்கரை பகுதிகளில் முன்னோர்கள் காலத்தில் பயன் படுத்தப்பட்டுள்ள அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல் நிலைப் பள்ளியின் வரலாற்று ஆசி ரியர் சிவகளை மாணிக்கம் , திரு நெல்வேலி சதக் அப்துல்லா கல் லூரியில் வரலாறு மற்றும் ஆராய்ச்சித் துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக சிவகளை சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் பலனாக தற்போது சிவகளையில் தமிழ் வட்டெழுத்து, தமிழ்மொழி கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வரலாற்று ஆசிரி யர் சிவகளை மாணிக்கம் கூறிய தாவது:

எனது வரலாற்று ஆய்வுப்பணிக் காக சிவகளை மேலக்குளத்தின் நீர் வெளியேறும் மடையின் படிக் கட்டுகளை ஆய்வு செய்தபோது அதில் 11ம் நூற்றாண்டின் தமிழ் வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட் டுள்ள கல்வெட்டும், 17ம் நூற்றாண் டின் தமிழ்மொழி கல்வெட்டுகளும் இருந்தன.இதனை இந்திய தொல் லியல் துறை ஆய்வாளர்கள் யத்தீஸ் குமார், பிரசன்னா, கல்வெட்டு ஆய் வாளர் வீரமணிகண்டன் மற்றும் பெங்களூர் கல்வெட்டு படியெ டுப்பாளர் நசுருல்லா ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேரில் வந்து கல்வெட்டுகளை படியெ டுத்து ஆய்வு செய்தனர். நான்கு வரிகளை கொண்டுள்ள இக்கல்வெட்டு 11ம் நூற்றாண்டை சேர்ந்த வட்ட எழுத்து என்பதும், இந்த எழுத்துக்களில் சிவகளையி லுள்ள இந்த குளம் அக்காலத்தில் நாரயணன் ஏரி என்று குறிப்பி டப்பட்டுள்ளது.இதேபோன்று, சிவகளை சேர்ந்தையன் சாஸ்தா கோவிலுக்கு எதிரேயுள்ள தரிசு குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள நடுகல்லில் அது 17ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ்மொழி கல்வெட்டு என்பதும், இந்த கல்வெட்டில், சிவ களையின் பெயரானது கடந்த நூற் றாண்டுகளில் செவளை என்றும், செவளையானது ஊருகால வம் பிள்ளை மகன் சந்திகாவலம் பிள்ளை என்பவருக்குரியது என் றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். இந்த கல்வெட்டுக்களை திரு நெல்வேலி சதக்அப்துல்லா கல் லூரி முதல்வர் முகம்மதுசாதிக், வர லாற்றுத்துறை தலைவர் நசீர்அக மது, ஆராய்ச்சி மைய ஒருங்கி ணைப்பாளர் சின்னத்தம்பி, பேரா சிரியை ஆஷா மற்றும் வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் மற் றும் பொதுமக்கள் நேரில் பார்த்து வியப்படைந்தனர்.

;