tamilnadu

img

எடப்பாடி அரசுக்கு பேரிடி போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி சிபிஎம் வரவேற்பு

சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை அமைக்க 10 ஆயிரம் கோடி செலவில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து திங்களன்று தீர்ப்பளித்துள்ளது. இது விவசாயிகளுக்கு கிடைத்த இடைக்கால வெற்றியாகும். உயர்நீதிமன்ற தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறியுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:சேலம் - சென்னை இடையே 8 வழி சுங்கச்சாலை அமைக்க தமிழக அரசு விவசாயிகள் மற்றும் மக்களின் எதிர்ப்பை மீறி வலுக்கட்டாயமாக நிலங்களை கையகப்படுத்தியது. இதை எதிர்த்து அரசியல் கட்சிகளும் பல்வேறு விவசாய அமைப்புகளும் போராடின. போராடிய விவசாயிகள், பெண்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீதுகாவல்துறையை கொண்டு அடக்குமுறையை ஏவிவிட்டது. எட்டுவழிச் சாலையின் ஆபத்தை விவசாயிகளிடம் எடுத்துரைக்க விவசாயிகள் சங்கம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்ல முயற்சித்த போது, அப்பகுதிகளுக்கு சென்றால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தர விட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி களும், பெண்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பெண்கள்என்றும் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அடித்து இழுத்து, மானபங்கப்படுத்தி காவல்துறை வண்டியில் ஏற்றி கைது செய்து சிறையில் அடைத்தது.விவசாய நிலங்களில், வீடுகளில், வகுப்பறைகளில் மாணவர்கள் பாடம் படித்துக்கொண்டிருக்கும்போதே, வகுப்பறைகளுக்கு இடையே எல்லைக்கல் நடும் பணியை வரு வாய்த்துறை மேற்கொண்டது. இதனால், பெண்களும், மாணவர்களும் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள்.


நிலத்தை கையகப்படுத்துகிறோம் என்கிற பெயரில் நிலம் கையகப்படுத்த லுக்கு உட்படாத நிலங்களிலும் ஆயி ரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன.இத்திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் எட்டுவழி சுங்கச்சாலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. எட்டுவழிச்சாலையின் பாதிப்பை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும் வகையில், விவசாயிகளின் பங்கேற்போடு திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை நடைபயணம் செல்வதென முடிவு செய்து 2018, ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபயணத்தை மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தலைமையில் துவக்கிய போது, நடைபயணத்திற்கு அனுமதி மறுத்து பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறை யில் அடைத்தது காவல்துறை.விவசாயிகள் தொடுத்த வழக்கில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டுமெனவும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்ற பின்னரே, இத்திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி யோசிக்க வேண்டுமெனவும், அதுவரை விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தக்கூடாது எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகும். இத்தீர்ப்பினை ஏற்று தமிழக அரசு ஒட்டுமொத்தமாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமெனவும், நிலம் கையகப்படுத்து வதற்காக இடிக்கப்பட்ட வீடுகள், சேதப்படுத்தப்பட்ட வயல்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென வும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


அன்புமணியின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்

இன்னொரு பக்கம் எட்டுவழிச் சாலையை எதிர்ப்பதாகக்கூறும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எட்டுவழிச்சலை திட்டத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்றியே தீருவேன் என உறுதி கொண்டுள்ள எடப்பாடியோடு தேர்தல் கூட்டணி வைத்துள்ளது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமாகும். பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பதைப் போல பாமக இரட்டை வேடம் போடாமல் எட்டு வழிச்சாலையை எதிர்ப்பது உண்மையானால் எடப்பாடிஅதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதை முறித்துக் கொள்ள வேண்டும். எடப்பாடியுடன் கூட்டணி தொடரும் என்கிற பட்சத்தில் எட்டு வழிச்சாலையைப் பற்றி எதிர்ப்புக்குரல் எழுப்ப அன்புமணி ராமதாசுக்கு தார்மீக உரிமையில்லை என்பதை சிபிஎம் மாநில செயற்குழு தெளிவுபடுத்த விரும்புகிறது.எட்டுவழிச்சாலைக்கு எதிராக போராடிய விவசாயிகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறது.

;