tamilnadu

img

ரத்த உறவு திருமணங்களில் தமிழகம் முதலிடமாம்...!  

ரத்த உறவு திருமணங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.  

தேசிய குடும்ப நல ஆய்வின்  ஐந்தாவது சுற்று தேசிய அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதில் மக்கள்தொகை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் மக்கள்தொகையின் பண்புகள் குறித்த விரிவான தகவல்களை அறிக்கை கொண்டுள்ளது. இதில் ரத்த உறவு திருமணங்கள் குறித்து ஒரு ஆய்வறிக்கை இடம் பெற்றிருந்தது. 

அதில் தென்மாநிலங்களில் ரத்த உறவு திருமணங்களில் தமிழகம் முதல் இடத்திலும் அதை தொடர்ந்து கர்நாடகா 27 சதவீதமும், ஆந்திராவில் 26 சதவீதமும், புதுச்சேரியில் 19 சதவீதமும், தெலுங்கானாவில் 18 சதவீதமும் ரத்த உறவு திருமணங்கள் நடப்பதாக தகவல்கள் கூறுகிறது.    

இந்த ரத்த உறவு திருமணங்கள் மூலம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தடுக்க ரத்த உறவு முறை திருமணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.