தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம், வரும் அக்டோபர் 31-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 31-ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார். மேலும், கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்த குறிப்புகள் அமைச்சர்களுக்கு தனியே அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.